நல்ல சமூகத்தை உருவாக்குவதில் பாரிய சவால் காணப்படும் நாட்டில் பாரதூரமான சமூக பிரச்சினையான போதைப் பொருள் பிரச்சினையில், இலங்கையின் வடக்கின் நிலைமை மிகவும் சோகமான நிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி ரிச்மென்ட் கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் மதுபானம் மூலமாக அரசாங்கத்திற்கு அதிகமான வருவாய் வடக்கில் இருந்தே கிடைத்து வருகிறது. இதனை தவிர ஹெரோயின், போதை வில்லைகள் வடக்கில் மிக வேகமாக சமூகமயப்பட்டு வருகிறது.
தெற்கிலும் இந்த பிரச்சினை உள்ளது. கொழும்பு பிரதேசத்தில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள் சம்பந்தமான காணப்படும் ஆபத்தான நிலைமை எப்படியானது என்பது எமக்கு சிக்கலுக்குரியது.
வடக்கை சேர்ந்த தாய் ஒருவர் என்னிடம் இவ்வாறு கூறினார். யார் எப்படி பிள்ளைகளை வளர்த்தாலும் பயனில்லை. பெட்டகத்தையும் அலுமாரியையும் பூட்ட தேவையில்லை. வயது வந்தவர்கள் பிள்ளைகளின் பின்னால் அனுப்ப வேண்டியதில்லை. முடிந்தால், தவறான இணைத்தளங்களை மூடி விடுங்கள். என என்னிடம் கோரிக்கை விடுத்தார்.
தாம் எப்படியான பாதுகாப்பை வழங்கினாலும் பிள்ளைகளுக்கு இணையத்தளங்களுடன் இருக்கும் தொடர் காரணமாக தற்போது பிள்ளைகளை வளர்ப்பது சிரமமானது எனவும் வடக்கை சேர்ந்த அந்த தாய் கூறினார்.
வித்தியாவின் மரணத்தை கேட்ட பலர், இணையத்தளங்களில்,தொலைக்காட்சிகளில் காணும் காட்சிகளை இளைஞர்கள் உண்மையில் செய்து பார்க்க முயற்சிப்பதாக கூறினர் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com

























