இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிக்கு தமது அரசாங்கத்தின் ஆதரவு வெளிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான கலந்துரையாடலின் போதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-puthinamnews.com
சிங்களவன் புத்த மதம் தழுவியவன் என்ற காரணத்திற்காக எல்லா புத்த நாடுகளும் இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்பு எடுத்துவருகின்றனர்.ஈழ மக்கள் சிங்களவனோடு சமாதானமாக வாழ முடியுமா.சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்த அரசாங்கம் இது.ஈழ மக்கள பட்ட / படும் துன்பம் சொல்லில் அடங்கா.சிங்களவனோடு சமாதானமாக வாழ ஈழ மக்களை கேட்டு அல்லவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.வேண்டாத மாபிள்ளையை அப்பாவி பெண்ணுக்கு கட்டிவைக்கும் கதையாக இருக்கிறது .துன்பம்தான் மிச்சம்.