தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையை தொடர்பில் அரசாங்ம் அக்கறை காட்டுவதோடு இதனை குறித்து அதிக உணர்வு பூர்வமான விடயமாக பார்க்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு நேற்று செவ்வாயக்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறித்த அறிக்கையின் மிக முக்கியமான சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் வட அமெரிக்கவில் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பயனபடுத்துவதாகவும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி, மற்றும் பிற தேவையான பொருட்கள் கொள்முதல் செய்துகொள்வதாகவும் குறித்த அறிக்கையின் முக்கிய கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் அறிக்கை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட வேண்டும் எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com


























முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களே, முதலில் ராணுவத்தினரிடம் சரணடைந்த புலித் தலைவர்கள், விடுதலைப் புலிகள் மற்றும் சுமார் 19000 தமிழர்கள், வருடங்கள் 6 ஆகியும் இதுநாள் வரை எந்தத் தகவல்களுமில்லையே. ஏன்? இவர்களின் கதி என்னவாயிற்று? ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் பேராளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் காண்பிக்கப் பட்ட கொடூரமான போர்க் குற்றப் படங்களையே சோடிக்கப் பட்டப் படங்களென்று நெஞ்சில் ஈரமில்லாமல் சொன்னவர்தானே நீங்கள். இதையெல்லாம் பற்றிப் பேச உங்களுக்கு இப்போது என்ன அருகதையுள்ளது.