பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் நிலை பரிதாபகரமாம்!

vavunija 2காணமல் போன கணவன்மார்கள், பிள்ளைகள், சகோதரர்கள் தேடியும், தடுப்பில் உள்ளவர்களுக்கான சட்ட ஆலோசனை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவும் எமது வாழ்கை முழுவதும் சீரழிந்து போகின்றதென யாழ்.மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியம் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதே விதவைகள் தினத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விதவைகள் தின நிகழ்வுகள் நல்லூர் கோவிலடியில் அமைந்துள்ள துர்க்காதேவி மணிமண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது..

இந் நிகழ்வில் வைத்து மேற்படி ஒன்றியத்தினால் மகஜர் ஒன்று யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில நந்தனனிடம் கையளிக்கப்பட்டது. இம் மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

பெண்களைத் தலமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பாதுகாப்புப் பிரச்சினைகளையே தொடர்சியமாக எதிர்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் வாழ்வாதார ரீதியில் ஓதுக்கப்பட்டவர்கள் போலவே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

அன்றாடம் உணவு, கல்வி, போசாக்கு, மருத்துவ செலவு, போக்குவரத்து போன்றவை தேவையாக உள்ளது. இருந்த போதும் அரசாங்கத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் 250 ரூபா போதுமானதாக இல்லை.

இவ்வாறான உதவித்திட்டங்களும் அங்கத்தவர்கள் கூடிய குடும்பங்களை முன்னிலைப்படுத்தி வழங்கப்படுவதால் தனித்து வாழும் பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

மேலும் வழங்கப்படும் வாழ்வாதார திட்டங்கள் அனைத்தும் பெண்களின் விருப்பத்திற்கும், திறன்களுக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். அதுவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தும் வகையில் கிராம மட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள கூடி வழிமுறைகள் உருவாக்கப்ட வேண்டும்.

வங்கிகளில் இலவாக கடன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஆரச திட்டங்கள் ஊடாக வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட வேண்டும். பயனாளிகள் தெரிவில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.

புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கி அதில் பெண்களைத் தலமைத்துவமாகக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்புக்கள் வழங்க வேண்டும்.

பாடசாலைகள் கிராமமாகக் கட்ட நிதிக்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும், பிள்கைகளிடமிருந்த நிதி அளவிடுகின்றன. அந்த அறவீடு பெண்கள் தலைமை தாங்கும் குடுப்பத்தின் பிள்ளைகளுக்கு விலக்க வேண்டும்.

மேலும் காணமல் போன எமது பிள்ளைகள், கணவவர்கள், சசோதரர்களை தேடிக் கண்டறியும் வல்லமை பெண்களைத் தலைமைத்தவமாகக் கொண்ட குடும்பங்களிடம் இல்லை. இது தொடர்பாகவும் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: