மூத்த வழக்குரைஞரான முகம்மட் ஷாபி அப்துல்லா, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) மீதான விசாரணையில் முரண்பாடுகளைத் தவிர்க்க விடுப்பில் செல்லுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் கூற வேண்டும் என்கிறார் பொதுக் கணக்குக் குழு உறுப்பினரான டோனி புவா.
1எம்டிபி-இன் பெரிய பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் பிரதமரின் “எழுத்துப்பூர்வமான அனுமதி” தேவை என்ற வகையில் அதன் ரிம42 பில்லியன் சர்ச்சையில் பிரதமர் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக புவா கூறினார்.
“இவ்வளவு பெரிய சர்ச்சையில் சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நஜிப்பே அதன் விசாரணையை வழிநடத்த அனுமதிக்கலாமா?
“இயற்கை நீதிக்காக போராடுபவராகக் கூறிக்கொள்ளும் முகம்மட் ஷாபி இதைத் தடுக்க வேண்டாமா?”, என்று புவா ஓர் அறிக்கையில் வினவினார்.
புவா 1எம்டிபி பற்றி நிறைய குறை சொல்லி வருபவர் என்பதால் அதன்மீதான விசாரணையில் அவர் நியாயமாக நடந்துகொள்ள மாட்டார் ஆகவே, அவர் பிஏசி-இலிருந்து விலக வேண்டும் என்றும் ஷாபி கோரிக்கை விடுத்திருப்பதற்கு புவா இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.
இடுப்புல கையை வச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பாரே தவிர, விடுப்புல போக மாட்டாரு! அக்கா ரோஸ்மா கடுப்பாயிடு வாங்க!