அமெரிக்காவின் கருத்திற்கு பழ.நெடுமாறன் கண்டனம்!

Needumaran-390-300x200சிங்கள அரசின் இந்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காத அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதற்குச் சமம். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் சுமார் 5 லட்சம் ஈழத் தமிழர்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக இருக்கின்றனர். சொந்த ஊருக்கே, சொந்த வீட்டுக்கோ திரும்பிச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. அவர்களது விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது.

மேலும், சிங்கள அரசு கைது செய்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கதி என்ன என்பதே தெரியவில்லை. 90 ஆயிரம் இளம் பெண்கள் விதவைகளாகி, வாழ முடியாமல் தவித்து வருகின்றனர்.

சிங்கள அரசின் இந்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காத அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதற்குச்சமம். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஐநா விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அக்குழுவானது அறிக்கை சமர்ப்பிப்பத்தை 6 மாதங்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது.

அந்த அறிக்கை தாமதி்க்காமல் உடனே வெளியிட்டு சர்வதேச நீதி விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்றும் பழ.நெடுமாறன் அவா்கள் தெரிவித்துள்ளாா்.

-http://www.sankathi24.com

TAGS: