தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. இப்படி பகிரங்கமாகவே பேசியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்து சிங்களவர்களிடம் கை தட்டலை வாங்கி , சிங்கள காடையர்கள் போடும் எலும்புக்கு வாலாட்டியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரிஸ் விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் , புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. யுத்தம் முடிந்த பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வழங்கிய தீர்ப்பு என்ன? பிரிக்கப்படாத இலங்கைக்குள் எமக்கான தீர்வைத்தாருங்கள் என்றுதானே கேட்டார்கள்.
ஆக மொத்தம் விடுதலைப் புலிகள் தான் பிரிந்து கிடந்த அனைத்து தரப்பினரையும் , ஒன்றாக இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று நிறுவினார்கள் என்பதனை சம்பந்தம் மறந்துவிட்டார் போலும். தற்போது விடுதலைப் புலிகளை தரம் தாழ்த்திப் பேசியது போதாது என்று , சில வெளிநாட்டவர்கள் கொடுக்கும் பணத்தில் இலங்கையில் அரசியல் நடத்தும் இவருக்கு நாங்கள் எச்சங்களாக காட்சி தருகிறோமாம். இதுதான் வேதனைக்குரிய விடையமாக உள்ளது.
-http://www.athirvu.com