தமிழினப் படுகொலை விவகாரத்தில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார்.
இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளவர்களில் ஒருவராக புலித்தேவனின் மனைவியிருக்கின்றார்.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு இந்த அழைப்பினை இவர் விடுத்துள்ளார்.
சிங்கள அரசினது இனஅழிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற இந்த கையெழுத்துப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து ஒத்துழைப்புடன் வலுவூட்ட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு இலட்சங்களைக் கடந்து ஒரு மில்லியன் ஒப்பங்களை நோக்கி செல்லும் இக்கையெழுத்துப் போராட்டத்தில் குறித்த www.tgte-icc.org இந்த இணையமூலம் மின்னொப்பம் இட்டுக் கொள்ளலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
அனைத்துலக சமுதாயம் விழிக்கும்
வரை.சங்கே முழங்கு இடைவிடாது.