இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது.
ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக இதனை தருகிறோம். இளகிய மனம் கொண்டவர்கள் பார்கவேண்டாம்.
-http://www.athirvu.com
http://www.dailymotion.com/video/x2vymth_torture_news
நெஞ்சை பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் இந்தக் கொடூரமான சித்திரவதைகள் இந்திய அரசுக்கு தெரியாமலா இருந்தது. ஆண்களின் நிலையே இப்படியென்றால் இவர்களிடம் கையில் அகப்பட்ட இளம் பெண்கள் குழந்தைகளின் நிலைதான் என்ன? ஆசியாயாவிலே முதன் முதலில் செவ்வாய்க் கிரகத்திற்க்கு வெற்றிகரமாக கோள் அனுப்பும் அளவிற்க்கு தொழில் திறன் பெற்ற இந்தியாவிற்க்கு இதெல்லாம் தெரியவில்லையென்று சொல்வது மிகக் கேவலம். ஆதாவது வின்வெளி வளர்ச்சியில் சீனாவையும் மிஞ்சி விட்டார்கள்; மேலும் வல்லரசு நாடான ரஷ்யாவிடம் நெருங்கிய உறவு. அன்று போர் நடந்த நேரத்தில் இவர்கள் போர் சம்பந்தமான தொழில் நுட்ப தகவல்கள் பரிமாரமலா இருந்திருப்பார்கள்; தெரிந்தும் ஏன் அன்று இலங்கை மேல் 2 முறை ஐ நா வில் கொண்டு வந்த போர்க் குற்ற விசாரணையை முடக்கும் அளவிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு நடந்துக் கொள்ள வேண்டும்? இதில் வேறு அன்று இந்தியாவிற்கு வருகைத் தந்த ராஜபக்சேவிற்கு ராஜ வரவேற்ப்பு. தமிழக மக்களுக்கு விளக்கம் தருவார்களா? இப்போதெலாம் தமிழக மக்களை என் உறவுகள் என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சமும் எனக்கு மகிழ்ச்சியில்லை. அந்த அளவிற்கு அவர்கள் மேல் நம்பிக்கையுமில்லை. அவர்களும் மிகக் கீழே இறங்கிப் போய் விட்டார்கள்.
காரணம் தமிழன்!,தமிழ் மொழி,தமிழர் நாடு! அவர்களுக்கு தேவை அற்றது! பிந்தியாவின் பிந்தி மொழி வடவனுக்கு முக்கியம்! பல்லாயிரம் ஆண்டுகள் தமிழன் அவர்களை ஆண்டதை இன்னமும் அவர்களால் சீரணிக்க முடியவில்லை! யார் அந்த தமிழர்கள்? சிந்து சமவெளி நாகரிக சொந்தக்காரர்கள்!!!
உலகின் முதல் இனம்,முதல் மொழி,முதல் நாகரிகம் என்று அடிக்கிக்கொண்டே போகலாம்…தமிழர்களை வாழ விட்டால் தத்தம் அடையாளங்கள் தலை தூக்காது…ஆகவே தமிழர்களை சிறிது சிறிதாக ஓரங்கட்டி முடிவில் முற்றாக அழித்திடும் முயற்சிகளும் திட்டங்களும் தீட்ட படுகிறது அன்றாடம்…
அதுமட்டுமல்ல. மறுபடியும் வடவன் தன் தலையில் கல் சுமக்க தயாராயில்லை என்பதைத்தான் அவர்களின் தமிழின எதிர்ப்பு போக்கு காட்டுகிறது.
இதெல்லாம் பொய் என்று துரோக இந்தியா சொல்லத்தான் போகிறது.இதையும் நம்பி தமிழ் நாடு மக்கள் இந்தியாவோடு சேர்ந்து வாழ்வோம் என்று அடம்பிடிக்கபோவதுதான் திண்ணம்.வட இந்தியாவோ தமிழர்களை முட்டாளாக தன் வசம் வைத்துக்கொள்வதுதான் நிலைமை.சிங்களவன் இந்தியாவின் ஆதரவோடு இன்னும் என்ன என்ன கொடுமைகளுக்கு ஈழ மக்களை ஆளாக்கினானோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை காப்பாற்ற முடியும் என்பது நியதி.
தமிழர்கள் மடையர்களாகவும் இனப்பற்று மொழிப்பற்று அற்றவர்களாகவும் இருக்கும் வரையில் ஒன்றுமே நடக்காது– அத்துடன் துரோகிகளும் காட்டிக்கொடுக்கும் ஈன ஜென்மங்களாகவும் இருக்கும் போது என்ன எதிர்பார்க்க முடியும்?