வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கு யாழில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் முன்னாள் போராளிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் பதவிக்கு குறி வைத்து, அது கிட்டாத நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் ஆசனம் கிடைக்காதென்பதும் உறுதியானதும், இந்த புதிய உத்தியை கையாள்வதாக தெரிகிறது. முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து, அவர்கனை முன்னிலைப்படுத்தி, தேர்தலில் குதித்தால் தமிழ் மக்கள் வாகக்ளிப்பார்கள் என அவர் கணக்குப் போட்டுள்ளதாக தெரிகிறது. இபோது புரியும் நாங்கள் யாரைக் குறிப்பிடுகிறோம் என்று. அவர் வேறு யாரும் அல்ல வித்தியாதரன் தான்.
இதற்காக அவரது உதவியாளர்கள் முன்னாள் போராளிகளை அணுகி ஆட்திரட்டும் நடவடிக்கையில் குதித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை முக்கிய கலந்துரையாடல் நடக்கவுள்ளதாகவும், அதற்கு அனைவரும் வர வேண்டுமென்றும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை நடக்கும் கலந்துரையாடல் ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதும், அங்கு என்ன முடிவு செய்யப்படவுள்ளதென்பதும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தென்றும் விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைய நிலையில், எந்த தமிழ் கட்சியையும் நம்ப முடியாத நிலையுள்ளதால் தாங்கள் ஒரு ஜனநாயக கட்டமைப்பாக தேர்தலில் களமிறங்க வேண்டுமென அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதனை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னாள் போராளிகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் குதித்தால் தான் வெற்றியீட்டலாமென அந்த ஊடகவியலாளர் கணக்குப் பண்ணியுள்ளார். யாழை மையப்படுத்தி பத்திரிகை யொன்றை ஆரம்பிக்கும் முயற்சியிலும் அந்த பத்திரிகையாளர் செயற்படுவதாக தெரிகிறது. தேர்தலை இலக்காக கொண்டு கடந்த பல மாதங்களாகவே முன்னாள் போராளிகள் இலக்கு வைக்கப்பட்டு, குறிப்பிட்ட சிலர் அங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து கூட்டங்களிற்கு அழைத்து வருவதே பணியாளர்களாக இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ‘அரசியல்’ பணியென அறிய முடிகிறது.
-http://www.athirvu.com