விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட் உட்கொண்டு இறந்து விட்டதாகவும், புலம்பெயர் நாடுகளில் தப்பி பிழைத்திருப்பவர்கள் ‘போலிப்புலிகள்’ என்றும், உள்ளுரில் ஜனநாயக போராளிகள் என்று கூறுபவர்கள் ‘அரச முகவர்கள்’ என்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
இன்று (06.07.2015) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தவிசாளர்களின் கூட்டம், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
‘எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.’ என்ற சம்பந்தனின் வேண்டுகோளையடுத்து, அங்கு கூடியிருந்தவர்களின் அபிப்பிராயம் அறிய கருத்துக்கூறும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போதே சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 11.00 மணியளவில் தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
‘ஜனநாயக போராளிகள்’ என்ற பெயரில் எங்களுடன் (த.தே.கூட்டமைப்பில்) இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்மை சந்திக்க வருபவர்கள் தொடர்பில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஜனநாயக போராளிகள் அமைப்பில் இருப்பவர்களில் யார் போராளிகள்? போராளிகள் அல்லாதவர்கள் யார்? என்ற சந்தேகம் இருக்கிறது. இவர்கள் உண்மையான போராளிகளாக இருந்திருந்தால் சயனைட் அடித்து இறந்திருப்பார்கள். ஆனால் இவர்கள் அரச முகவர்களாக செயல்பட்டுகொண்டிருப்பவர்கள். என்று தெரிவித்தார்.
-http://www.tamilcnnlk.com
திரு ஸ்ரீதரன் அவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள்வது நல்லது .எந்த ஒரு போராளியைபற்றியும் கருத்து கூறும்பொழுது அவர்களுடய லட்சியங்களையும் தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை புரிந்து நாகரிகமாக கருத்து கூருவது மிகவும் நல்லது .நீங்கள் அப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருந்தால் அது மிகவும் கண்டிக்கதட்க கருத்துஆகும் .