இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) சார்பிலேயே இவர் கம்பகா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
1987ஆம் ஆண்டு சிறிலங்கா வந்திருந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை, அணிவகுப்பு நிகழ்வின் போது, துப்பாக்கியால் தாக்கியிருந்தார் விஜித் ரோகண விஜேமுனி.
சிறைத்தண்டனையின் பின்னர் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அதேவேளை, பிஜேபி கட்சியின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனிய நந்த தேரர், கொழும்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
-http://www.pathivu.com