வித்தியின் விளையாட்டு: அப்பாவி முன் நாள் புலிகளை களம் இறக்குவதில் உள்ள மர்மம் என்ன ?

ஜனநாயகப் போராளிகள் என்று ஒரு கட்சியை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் , அதில் முழுக்க முழுக்க முன் நாள் விடுதலைப் புலிகளை இணைத்துள்ளதாகவும் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். வரும் பொதுத் தேர்தலில் இக்கட்சியூடாக களம் இறங்கும் வித்தி , அப்பாவி முன் நாள் விடுதலைப் புலிகளை பலிகடா ஆக்கியுள்ளார். வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முன் நாள் புலிகளை இவர் களம் இறக்குவதன் மூலம் , மாபெரும் துரோகம் ஒன்றை இவர் செய்துள்ளார். புலிகளால் ஒன்றுசேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வட கிழக்கில் ஆதரவு உண்டு. இதனை உடைப்பது என்பது மிகவும் கடினமான விடையம்.

இன் நிலையில் வித்தி முன்னாள் புலிகளை தேர்தலில் களம் இறக்கி , அவர்கள் தோற்றுப்போகும் தருணத்தில் தான் நினைத்ததை முடித்திருப்பார். அது என்னவென்றால் சர்வதேசத்திற்கு காட்டுவது தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்று. விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்தவர்கள் என்று உலகிற்கு காட்டவே வித்தியாதரன் இவ்வாறு செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் வித்தியாதரன் தற்போது இணைத்து வைத்துள்ள விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர்கள் , எவரும் புலிகளின் சமாதானச் செயலகத்திலோ இல்லை அரசியல் பிரிவிலோ பணியாற்றியவர்கள் அல்ல.

மேலும் கடைசி நேரத்தில் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் , அல்லது சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களை வளைத்துப் போட்டே வித்தியாதரன் இவ்வாறு ஒரு பாதகமான காரியத்தை செய்ய முற்பட்டுள்ளார். இது போன்ற நடவடிக்கையால் ,தமிழ் தேசியத்திற்கான மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளே பெரிதும் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

-http://www.athirvu.com

TAGS: