கோலாலும்பூர், மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று, லவ் யாட் பிளாசாவில் கைபேசி ஒன்றைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
ஷாருல் அன்வார் அப்துல் அஜீஸ், 22, ஜூலை 11இல் மாலை மணி 4.47 அளவில் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
திருட்டுக் குற்றங்களுக்கான குற்றவியல் சட்டம் பகுதி 380-இன்கீழ் அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அச்சட்டம் குற்றவாளிகளுக்கு ஏழாண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.
மெஜிஸ்திரேட் நூர் அமினாதுல் மர்டியா முகம்மட் நோர், ரிம3,000 பிணையிலும் ஒருவர் பொறுப்பிலும் ஷாருலை விடுவித்தார். ஆகஸ்ட் 14இல் அவ்வழக்கு விசாரணைக்கு வரும்.
கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனே அலட்டிக்காமல் இருக்கும்போது, கேவலம் ஒரு தொலைபேசிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ?
ஒருவேளை “கோடி”-யில் சம்பந்தபட்டவர் தலைவன் என்பதனாலும், “தொலைபேசி”யில் சம்பந்தபட்டவர் சாதாரண குடிமகன் என்பதனாலும், சட்டம் இருவருக்கும் இருவேறு சட்டங்கள் இருக்குமோ ?
இவன் ஒருவனால் இனம் பதற்றம் ஏற்பட்டிருகிறது நாடே சபிதம் அடைந்து விட்டது,சி சி டிவியில் அவன் வுருவம் பதிவாயிருகிறது அப்புறம் என்ன 8மாதம் திர்ப்பு சீக்கிரம் அவனுக்கு தண்டனை தர வேண்டும் நீதித்துறை,அது மட்டும் இல்லை அவன் திருடன் என்று தெறிந்தும் காவல் துறை எப்படி அவனை வெளியே விட்டது.இப்படி பட்டவர்களை தண்டிக வேண்டும் இல்லையே மற்றவர்களும் இதை பின்பற்றுவார்கள்.
இவனை செருப்பால் அடிக்கவேண்டும்.
இவனுக்கு சில மூடர்களின் தயவால் பெரிய ஹீரோபோல் ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.
இக் காலக்கட்டத்தில் எந்த மலாய்க்காரனும் தான் இந் நாட்டின் மைந்தன் என்ற மமதையில் –இதை ஊட்டி வளர்த்ததே அம்னோவும் -குறிப்பாக காகாதிமிரும்தான்– என்ன தவறு செய்தாலும் அதை ஒப்புகொள்வதே கிடையாது–பிரதமனே அப்படி இருக்கும் போது அவனின் குஞ்சுகள் பிறகு எப்படி? எல்லாம் திமிரின் ஆட்டம்.