தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்,
தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.
போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.
அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
இவன் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன். தமிழன் குடியை கெடுத்த விபசார தரகன் .” ஊழ் வினை ஊட்டு வந்து உறுத்தும் ” செய்த பாவம் உன்னை கொல்லாமல் விடாது.
இந்த துரோகியால் தான் அத்தனை உடன் பிறப்புகள் கொல்லப்பட்டனர். இவனைப்போன்ற ஈன ஜென்மங்கள் நம்மில் எட்டப்பன் காலத்தில் இருந்து இருக்கின்றனர். அதற்க்கு முன்பிருந்து கூட— திருக்குறளை அரங்கேற்றவே மதுரையில் அறிவார்ந்த துரோகிகள் எதித்தார்கலாம். காடிகொடுக்கும் புத்தி நம்முடைய சாபக்கேடு .
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பதேது ?ஏய் !காட்டிக்குடுத்த கருணா இனத் துரோகியே உனக்கு ஏதடா நிம்மதி! உன் மனசாட்சியே உன்னை கொல்லும்!
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணா இதுதான் வாய்க்கும்.
வச்சானுங்க்களா ஆப்பு?
சொந்த நலத்துக்காக உன் இனத்தை அழிக்க உதவி செய்தாயே. இனிமேதான் உன் கெ….காலம் .