நியாமா பாருங்கள், பகிருங்கள் ? மிரிசலாகுங்கள்!
மலேசியத் தமிழர்கள் ஒரு முக்கியமான கால கட்டதில் உள்ளோம்.
தமிழர்களே ! நாம் மாற்று அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதன் ஒரே நோக்கம் கூட்டமைப்பு என்ற ஏமாளித்தன நம்பிக்கை…இது இருக்கும் வரை இளைஞர்களால் அரசியலில் பிரவேசிக்க முடியாது, மீறி பிரவேசித்தாலும் எம்மை நம்மை இனவாதி என்பார் . இருந்து விட்டு போவோம் .எவனிடம் இனவாதம் இல்லை? நமக்கு அது இல்லாமலிருக்க ???
எனவே தான் கூட்டமைப்பை தோல்வியடைய செய்து, தமிழ் இளைஞர்கள் மூத்தவர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து புதியதோர் பலமிக்க அரசியல் கட்சியொன்றை உருவாக்க வேண்டும். கூட்டமைப்பை தோல்வியடைய செய்வதன் மூலம் தான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பயத்தை உண்டு செய்யலாம். இனிமேல் அவர் அவர் மக்களுக்காக உண்மையாக செயல்படும் கட்சிகளுக்கே தலைவர்களுக்கே மக்களின் ஆதரவு தரும் காலம் வந்துவிட்டது .
மீண்டும் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் அவர்களை பிடிக்கவே முடியாது.. BN என்ன செய்தது PR என்ன செய்து கிழித்து விட்டது என்று கேட்டு பாருங்கள் ஒரு YB யும் வாயை திறக்க மாட்டார்கள் ..உதடை பிதிக்கி எச்சிலை சாப்பிட்டு விடும் ஜெனமங்கள் அடுத்த ஐந்து ஆண்டுக்கு வரணுமா ? சிந்தியுங்கள் தமிழ் மக்களே மக்களே!
உங்கள் கருத்துகளை கீழ் பகிருங்கள்… தமிழா !
-பொன்.ரங்கன்
சொல்லத்தான் நினைக்கின்றேன் அவர்களின் கருத்தை வரவேற்கின்றோம். தமிழர் என்றால் அவர் பெயரைப் பார்த்து முகத்தைப் பார்க்காமல் இவர் தமிழர் என்றோ அல்லது தமிழர் பரம்பரை வழி வந்தவர் என்றோ அறிய வழி இருக்க வேண்டும். இந்த அடிப்படி தகுதி கூட இல்லையானால் தமிழர் என்பதில் அர்த்தமென்ன உள்ளது?. தென்னாட்டவரில் பெரும்பாலோர் சைவ சமயிகள் என்பதே வரலாறு. அதனால்தான் தமிழர் ஆலயத்திர்க்குச் சென்றால் நாம் சொல்லாமலேயே அர்ச்சகர் சிவகோத்திர பெயரைச் சொல்லி அருச்சனை செய்வார். இதை மாறிப் போனவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “இந்து” என்ற வார்த்தை தமிழர் வாயில் துனித்த புண்ணியவான்களைக் கேளுங்கள் இது எங்கிருந்து வந்தது என்று. அவர்களுக்கே பதில் சொல்லத் தெரியாது. தமிழர் தங்களை “இந்து” என்று சொல்லிக் கொள்வது வரலாற்றுப் பிழை. இதைத் திருத்தி தம்மை சைவர் என்று சொல்வதே முறை. சில நூற்றாண்டுகளாக ஒரு பிழையைத் தமிழர் செய்து வந்தால், அது பிழை என்று அறிந்தவுடன் திருத்திக் கொள்வதே தமிழரின் அறிவுடைமை. இன்று இண்டிய முஸ்லிமாகிப் போன தமிழரில் எத்துனை பேர் தங்களை தமிழர் என்று சொல்லிக் கொள்ள தயாராக உள்ளனர். கையை உயர்த்தினால் விரலை விட்டு எண்ணி விடலாம். அவ்வாறே தமிழர் என்போர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிப் போனோர் இன்று எத்துனை பேர் தமிழரின் பண்பாட்டைப் பின் பற்றுகின்றனர்?. தமிழர் பெயர் வேண்டாம், தமிழர் பண்பாடு வேண்டாம் ஆனால் அவர்தம் உரிமையில் பங்கு வேண்டும் என்றால் என்னே அபத்தம்!.
தமிழர் உரிமையை தற்காக்கும் பொது தமிழர் அல்லாதவர் அடிக்கடி இடையில் புகுந்து அதை நாசா படுத்துவது வந்தேறிகளின் சாணக்கியம் என உணர்வீர் தமிழர் தொண்டர்களே! ஊரு ரெண்டு பட்டதால் தானே இன்று இந்த இழி நிலை! ஆகா; முதலில் சரியான, முறையான,உறுதியான தமிழர் கட்டமைப்பு உருவாக்கம் காண வேண்டும்.அதன்பின் கட்டமைப்பின் தமிழர் வளர்ச்சி செயல் திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக வரைந்து அதன் செயலாக்கத்தில் வெற்றி காண்பது மிக மிக அவசியம்….(தொடரும்)
சார் தமிழ் பள்ளியில் படிக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் பெற்றோர்கல் தமிழ் பெயர்களை வைப்பது இல்லை. நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு பலர் மலையாள , தெலுங்கு பெயர்களை வைக்கின்றனர் . தமிழர் முகத்தை பார்த்தவுடம் இவர் தமிழா என்று தெரிந்து கொள்ள தமிழர்கள் தமிழர்களையே திருமணம் செய்துகொண்டால் அந்த தமிமிழர் முகம் வந்து விடும் . இதை செய்தாலே போதும் நாம் தமிழர் என்று பெருமை படலம் .
இந்த நாட்டிலும் தமிழன் உருப்படாமல் போய் விட்டன் இன்னும் தமிழ் நாடு தமிழனை
பற்றி வாய் கிழிய பேசி கொண்டிருக்கிறான் .சிவாஜியின் வீரபாண்டிய கட்ட பொம்மன் சினிமா வசனம் பேசி கொண்டிருக்கிறான் .
அவன் தெலுங்கன் என்றால் எப்படியட தமிழில் வசனம் பேசி இருப்பான் .மலேசியா தமிழனை பற்றி பேசுங்கள் . சென்னை தமிழனை புறம் தள்ளுங்கள் ,அவன் ஜாதி வெறிபிடித்த முட்டாள்கள் .நாமாவது திருந்தி வாழுவோம்.
இந்நாட்டில் தமிழன் உருபட்டு வாழ்வதால்தான் இன்று தான் யார் என்று அறிந்து செயல்பட துவங்கி விட்டனர். இது தமிழர் அல்லாதோருக்கு புளியைக் கரைத்து வயிற்றில் ஊத்தியது போலிருப்பதால் தெலுங்கன் எப்படியடா தமிழில் பேசி இருப்பான் என்று கேட்கின்றான். இன்று மட்டும் தெலுங்கன் தமிழில் பேசவில்லையா?
அடாடா! மீண்டும் ஆரம்பிச்சிடீங்களா! தமிழன், தெலுங்கன், மலையாளி, சீக்கியர், குஜாராத்தியர் இந்த அனைத்து இந்திய சமூகமும் முன்னேற வேண்டும். ஓர் இனம் தாழ்ந்து போனால் அதில் நமக்கு என்ன மகிழ்ச்சி? அனைத்து இனமும் முன்னேற்றம் அடைந்தால் தானே நாமும் சந்தோஷமாக வாழ முடியும். தெலுங்கன் தோற்றுப் போனால், மலையாளி தோற்றுப் போனால் தமிழனுக்கு அதனால் என்ன மகிழ்ச்சி? நாம் அனைவரும் சேர்ந்து தான் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். தனித்தனியாக பிரிந்து நம்மால் செயல்பட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இளந்தலைமுறையினர் தங்களது முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். நமக்குள் பிரிவினை வேண்டாம்!
அய்யா, என் கஷ்ட நேரதில் உதவியவர் தெலுங்கர் , இன்னும் பலர் ஒரு சிலர் சுயனலவதியே , எல்லோரையும் குறை சொல்ல கூடாது , மலையாளிகளோ , மலைகரர்களோ , தெலுங்கர்களோ , சினர்களோ , இன வெறி கூடாது , நாம் எல்லோரும் பொதுநலமாக இருப்பதுதான் சிறப்பு. இன வெறி மனிதனின் எண்ணதில் ஒரு புற்று நோய் ! , அன்பும் பண்பும் வளர்க்கும் வார்த்தைகளை பேசுவோம் , நன்றி அய்யா
யாரையா பிரிவினையை ஆரம்பித்தது? தமிழர் நாட்டை சுற்றி உள்ள மலை பகுதிகளை அண்டை மாநிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பதை தாங்கள் அறியாதது ஏனோ? அதனால்தானே இன்று இந்த வரட்சி! வந்தேறிகளுக்கு வாழ இடம் கொடுத்து,சோற்றில் பங்கும் கொடுத்து கடைசியாக எங்கள் உயிரையும் கொடுக்க வேண்டுமா? அதே நிலைதான் இங்கும் தலைவிரித்தாடுகிறது..
தமிழ் நாட்டு விவகாரத்தை தமிழ் நாட்டு மக்களிடமே விட்டு விடுவோம். அவர்களும் படித்தவர்கள் சிந்திக்கத் திறன் கொண்டவர்களே!! ………………….
சிந்திக்க திறன் கொண்டவர்கள் தான் ஆனாலும் தமிழன் என்ற வகையில் யாரும் அவர்களின் மடத்தனத்தை சுட்டிக்காட்ட நமக்கு உரிமை இருக்கிறது– காரணம் நாம் ஓர் இனம்– நமக்கு வேண்டாம் என்றாலும் அது நம்முள் திணிக்கப்படும்– தமிழ் நாட்டு தமிழர்கள் நல்ல நிலையில் இருந்தால் நமக்கு எங்கும் மரியாதை கிடக்கும். தமிழன்களை எங்குமே மதிப்பதில்லை– தமிழ் நாட்டிலேயே அது நடக்கிறது. இந்தியாவில் தமிழர்களை கேலி செய்து நகைப்புக்கு ஆளாக்கி விளையாடுகிரான்கள்- பக்கத்து தெலுங்கன் அவர்ஹலி கொன்று குவிக்கிறான் கன்னடன் திருவள்ளுவர் சிலையை திறக்க விட மாட்டேன் என்கிறான் மலையாளி தண்ணீர் தொல்லை கொடுக்கிறான் — ஏன்? தமிழன்கள் சிந்தனை எல்லாம் தண்ணீர் -அது தான் அந்த தண்ணீர்-மேல் தானே இருக்கிறது– நம் இனம் முன்னேற வேண்டும் நம் இனத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ– வீணாக வறட்டு பெருமை பேசி ஒரு புண்ணியமும் இல்லை.
அது அவர்கள் விவகாரம் என்று விட்டதால் மூன்று லட்சம் ஈழ தமிழனை இழந்தோம் நேற்று! நாளை அதே நிலை உமக்கு வராதென என்ன நிச்சயம்? நமது உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாப்பது இன வெறி அல்ல..
அட அறிவு ஜீவிகளா, இந்தியர்களை கூரு போடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் தமிழர்களா, உங்கள் கூற்று போல், நாளை மலாய் காரர்களும், இந்தியர்கள் இந்த நாட்டில் இருப்பதால் தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறைகிறது, ஆகையால் திரும்ப செல்லுங்கள் என்றால் எங்கே செல்வோம் நாம் ? ஒரு முறை LTTE தலைவர் வேலு பிள்ளை பிரபாகரன், தமிழர் பகுதியில் இருந்த 80,000 இந்து முஸ்லிம்களை ஒரே நாளில் வெளிஎட்றினார் காரணம் அவர்கள் சிங்களவர்களுக்கு துணையாக வேவு பார்ப்பதால். அதே போல் இன்று சிங்கள கொடிய அரசாங்கம் தமிழர்கள் பகுதிகளை ஆக்கரமித்து, 400, 000 தமிழர்களை கொன்று குவித்திருக்கிறது. உலக நாடுகள் பல்லிளிக்கின்றன. எதை விதைதொமோ, அதை நாமே அறுவடை செய்கிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இன்று கூட சட்ட துறை தலைவரை மாற்றியதில், 1963 ஆண்டோடு, சில சட்டங்கள் முடங்கின என்று படித்தேன். கவனம். நாளை இதே சட்டம் சிரும்பான்மையினருக்கும் திரும்பலாம்.
நம்ம நாட்டில் வாழும் தமிழர்கள் மிகவும் பாவப் பட்ட ஜென்மங்கள் போல இருக்கு. தங்களை தமிழர் என்று சொல்லிக் கொண்டு வளர கூட உரிமை இல்லாதவராக சக தமிழர்களாலேயே நசுக்கப் படுவதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஒன்று செய்வோமா. இப்படிப் பட்ட அரை தமிழராக வாழ்ந்து இவர்களிடம் அல்லல் படுவதை விட பேசாமல் வேறு இனமாக மாறிப் போய் விட்டால் இந்த முழு இண்டியன்களை கொஞ்சம் சந்தோசப் படுத்தலாமே!.
“dhilip2 உன் pizza hut delivery மூளையை வேறு எங்காவது போய் பயன்படுத்து”. முதலில் இது தமிழன் பிரச்னை,இந்தியன் அல்ல; அதனால் உனக்கு புரிய வாய்ப்பில்லை! தமிழனை இந்தியன் கூறு போட்டதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளை நான் நன்கு அறிவேன். மலாய்க்காரன் பூச்சாண்டி வித்தைகள் உன்னை போன்றோரிடம் செல்லும் என்னிடம் அல்ல! அடுத்து இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று துல்லியமாக கூற முடியும் என்னால்,அதுதான் என் வேலை. தலைவர் பிரபாகரன் ஈழ தமிழர்கள் உரிமைக்காக பல அதிரடி நடவடிக்கைகளை கட்டாயத்தின் அடிப்படையில் செயலாற்றியது யாவரும் அறிவர்.முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தது ஒரு வகையில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் வழி வகுத்தது அல்லவா? பல ஆயிரம் ஆண்டுகள் ஈழ தமிழன் வாழ்ந்த மண்ணின் உரிமை போராட்டத்தை இந்தியா மற்றும் 23 பேடி நாடுகள் கூட்டு சதி வேலைகளால் மட்டுமே தற்காலிக தோல்வியை ஏற்படுத்த முடிந்தது.இனி ஈழ தமிழன் எதை விதைக்க வேண்டுமோ உன் ஆலோசனை படியே விதைப்பான் சரியா???
நம்ம நாட்டு தமிழர்களின் அடையாள அட்டையில் யாருக்காவது ‘இண்டியன் பிரஜை” (‘warganegara India’) என்று அடையாள முத்திரை குத்தி இருக்கின்றார்களா?. இல்லையே. அதனால் நாம் மலேசிய தமிழர்கள். “இண்டியன்” என்ற அடையாளத்தை எம் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை. அது இந்நாட்டு குடிமக்களுக்குச் செய்யும் துரோகமாகும். அது இந்நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும்.
கூறுகெட்ட தமிழர்கள் தங்களை ‘இண்டியன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாளை நம்மை இண்டியாவிர்க்குப் போகச் சொல்லுவான். நாம் மலேசியர்கள் என்றால் இந்நாட்டு பிரஜைக்கு உரிய உரிமை நமக்கும் உண்டு என்று அவர்களிடம் சொல்லி வாயை அடைக்கலாம். நமக்குள் பிரிவினை வேண்டாம் நாம் எல்லோரும் மலேசியர்கள் என்று சொல்லிக் கொள்வோமே. ஏன் இந்த “இண்டியன்” என்ற வரட்டு கௌரவம். இதுதான் ஒற்றுமையில் ஒற்றுமை. இனி வேண்டாம் அந்த “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற ஓடாத ஓட்டை வண்டி.
நிலை அறிந்துதானோ “மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது” என்று அன்றே பாடல் வரியில் தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கான்?? ஐயா தேனீ அவர்களே, நமது பிறப்புப் பத்திரத்தில் keturunan india ugama HINDU என்றுதானே முத்திரை குத்தியுள்ளான்?? மலேசிய இந்தியர்கள், அவரவர் வம்சாவளி நம்பிக்கைப் பிரகாரம் வாழ்ந்திட்டுப் போகட்டும்!! யாரும் பகமை உணர்வுடன் வாழ வேண்டாம்!! பிரச்சனை என்றால் மலேசிய இந்தியனாக ஒன்று பட்டு குரல் எழுப்புவோம்!!! அனைத்து வம்சாவளியினரும் முன்னேற முடிந்தவரை உதவிக்கரம் நீட்டுவோம்!! சிந்திப்போம் செயல்படுவோம்!!!
நம்முடைய அடையாள கார்டே சொல்கிறது நாம் மலேசியர் என்று.அது இந்த நாட்டு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.இந்தியர்கள் என்று சொல்வதை விடுத்தது மலேசியர்கள் என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டால் நமக்கு கொடுக்க வேண்டியதை மலாய்காரன் தங்கத் தாம்பாளத்தில் ஒன்றும் அள்ளிக் கொடுத்து விட மாட்டான்.மலாய்காரன்கூட தன்னை மலாய்காரன் [melayu] என்றுதான் சொல்லிக் கொள்கிறான்.இனம் என்றால் அது இனம்தான்.நாட்டுக்காக இனத்தின் மீது சாயம் பூசிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.நாம்தான் ஒரு படி மேலே போய் தமிழினத்தின் மீது இந்தியன் என்ற சாயத்தைப் பூசிக்கொண்டு இன அடையாளத்தையே இழந்துக் கொண்டிருக்கிறோம்.இது போதாதென்று இன்னும் வேண்டுமா?
எம்முடைய பிறப்பு ஆவணங்களில் எம்முடைய பரம்பரை ‘தமிழ்’ என்றும் எம்முடைய சமயம் ‘சைவம்’ என்றும் அரசாங்க பதிவேட்டில் இன்னும் சில வாரங்களில் மாற்றி விட்டு மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது யாம் சைவத் தமிழன் என்று பறைசாற்றுகின்றேன்.
உண்மைத் தமிழனுக்கு மனமும் குணமும் மாறாது. துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும் மாறாதையா மாறது. தேனின் சொரூபமும் மாறாதையா மாறாது. இது தமிழர் பண்பாட்டில் வந்த அறத்தில் நின்று என்றும் ஒரு நிலைப் பட்டிருக்கும் சைவனின் உயிர்.
சின்ன எறும்புக்கு இண்டியன் புத்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை ! ஒரு வேளை இண்டியன் ,திராவிடன் ,தமிழன் என்று ராமசாமி உளறுவது போல எதை ஊற்றி தேய்த்தாலும் மரக்கறி கொட்டகை கருமைக்கு தெளிவு வராது போலும். இருப்புக்கு எறும்புகள் போகும் வழியை கொஞ்சம் சீண்டிவிட்டால் தட்டு தடுமாறி எப்படியாவது அது வந்த வழியை கண்டு பிடித்து விடும் ஆனால் இந்த சிற்றெரும்பு தமிழனாய் வந்து ஓசியில் திராவிட நாயாய் புகுந்து இண்டியன் ஈயாய் திரிய காரணம் என்ன? நாட்டின் அரசியல் அரசு ஒழுங்கு சீர்கெட்டு கட்சிகள் கழுதைகளாக மிச்சங்கள் போக எச்சில்களாக கிடப்பதை மொய்க்க உனக்கு என்ன ஆச்சி முது சந்திரா ?
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும்
குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
“நாவலன் தீவு (எ) குமரிக்கண்டம்”
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
ஆம் இது தான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட” குமரிக்கண்டம்”.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும்,தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும்,நாம் நன்கறிகிறோம்.
தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்,கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டு களுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்” குமரிக்கண்டம்”.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.!! குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ்ர் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ்,தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும்,தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும்,தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் :-
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, ” பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்து விட்டது.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன்” அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய” மதுரையில் “கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்” அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்.!!!!..
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.
இனிமேல் நாம் 2000வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
* உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
வங்கி கணக்கு
2% * குறைந்த வட்டி விகிதம்
* நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
*. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
உன்னிடமிருந்து.
இந்த அதிகார முறையான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
எல்லோரும் நிதி உதவி கொடுக்க
மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான
மின்னஞ்சல்: [email protected]
சிறந்த அன்புடன்
சர் ஜோயல் வில்லியம்ஸ்
காசு FIRM லோன் நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரி
தொலைபேசி: +60183723787
மின்னஞ்சல்: [email protected]
Webisite: cashfirmarena.wordpress.com