தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது தென்னிலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றிவருமானால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகமொன்றிடன் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் பாராளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம். தொடர்ந்து தென்னிலங்கை தமிழ் மக்களை ஏமாற்றிவரும் என்றால் சர்வதேச உதவியுடன் பிரிந்து செல்வதன் மூலமே எமது பிரச்சனைக்கான தீர்வினைக் காணமுடியும்.” என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com


























எவ்வளவு காலம்தான் இப்படி சொல்லி ஈழ மக்களை ஏமாற்றுவீர்.உடனே செயலில் இறங்குவதுதான் சாணக்கியத்தனம்.
பிரிந்துச் செல்வதென்றால், 1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்ற அன்றே பிரிந்திருக்க வேண்டும்; இந்தியக் துணைக் கண்டத்திலிருந்து அன்று பாகிஸ்தான் பிரிந்ததைப் போன்று, அன்று தமிழீழமும் பிரிந்திருக்க வேண்டும். இந்தத் தவறின் பலனை ஒருத் தவறும் செய்யாத ஈழத் தமிழர்கள் இன்று அனுபவித்துத் கொண்டிருக்கின்றார்கள்.
1. தம்பி Nageswaran அவர்களே, ஈழத் தமிழர்களை யாரும் ஏமாற்ற வில்லை; பிரிந்து செல்லவேண்டுமென்று அவர்கள் செயலில் இறங்கினால், இந்திய அரசு சும்மா இருக்குமா? தங்களில் பாதுகாப்புக் கருதி அவர்கள் தமிழருக்கு தனி நாடு அமைவதை என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரசியாவும், சீனாவும் சும்மா இருப்பார்களா? தங்களின் பொருளாதார நலன், நாட்டின் பாதுகாப்பும் மட்டும் கருதி தனி ஈழம் அமைவதை அமெரிக்கா ஆதரிக்குமா? உலக வரைப் படத்தில், இலங்கை முக்கிய இடத்தில் அமைந்துள்ளது.
2. தனி ஈழம் அமைவதற்கு, தமிழக மக்கள் உறுதியோடு நின்று இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவின்றி மற்ற நாடுகள் தனி ஈழம் அமைவதற்கு ஆதரவு கொடுக்க முன் மாட்டார்கள். உண்மையில் அரசியல் சாணக்கியத்தனம் தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது.
3. அன்று போரென்றப் பேரில் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப் பட்டது திட்டமிட்ட இனப் படுகொலை. நடந்தது வெறும் போர்க் குற்றமில்லை. இந்திய அரசுக்கு இந்த உண்மை நன்குத் தெரியும். தெரிந்தும் ஏன் இன்றும் இலங்கைக்கு ஆதரவாக செயல் பட வேண்டும். எல்லாம் அரசியல் ஆதாயம்தான். நடந்து இனப் படுகொலையென்று உறுதிபடுத்தப் பட்டால், உலக நாடுகளின் விதிமுறைப் படி தங்களின் எதிர்க் காலத்தை தாங்களே முடிவு செய்யும் உரிமையை ஈழத் தமிழர்கள் பெற்று விடுவார்கள். “மனதில் கள்ளமில்லையென்றால், விழியில் பயமில்லையென்பது” உண்மைதான். மறைப்பதற்கு எதுவுமில்லையென்றால், ஐநாவின் இந்த போர்க் குற்ற விசாரணையை சந்திப்பதற்கு இலங்கை அரசு தயங்குவது ஏன்?