வட கிழக்கின் தேர்தல் களத்தில் நுழைந்திருக்கும் புலனாய்வாளர்களும் றோவும்

raw_army_001நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் முக்கிய தமிழின உணர்வாளர்கள் நாடாளுமன்றம் செல்வதை தடுக்கும் சூழ்ச்சித் திட்டங்களை இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றமையை அண்மைய நாட்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து பிறந்ததே தமிழ் தேசிய கூட்டமைப்பு.

தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மட்டும் நின்றுவிடாது, இலங்கை நாடாளுமன்றத்திற்குள் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எம்மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்பதன் உயரிய நோக்கின் அடிப்படையிலேயே,

ஆயுதப் போராட்டத்தினையும் அரசியலையும் வெவ்வேறான தளங்களிலேயே உருவகித்து ஆயுதப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியாகவே தமிழர் அரசியலை சர்வதேசத்துக்கு வெளிக்காட்ட முனைந்தார் தமிழ்த் தேசியத் தலைவர்.

 அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கியிருந்தார்.

tna_eastஒருபுறம் ஆயுதப் போராட்டம் உச்சத்தினை தொட்டு இலங்கை அரசாங்கப் படைகளை விட அதிக பலத்தில் புலிகள் திகழ்ந்து கொண்டிருக்க, மறுபுறம், அரசியல் ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை உருவாக்கி இலங்கை நாடாளுமன்றத்திற்குள் அனுப்பி வைத்தார் புலிகளின் தலைவர்.

இதன் விளைவாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசத் தொடங்கினர் தமிழ் அரசியல் தலைமைகள்.

ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்வுகள், ஒன்று ஆயுதப் போராட்டம், இன்னொன்று நாடாளுமன்றத்திற்கு தேர்தலின் மூலம் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள்.

இதனை அன்றைய அரசியல் ஆய்வாளர்கள் பலரும் வெகுவாக பாராட்டியிருந்ததோடு, சிறந்த விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு பெரிதும் கலக்கமாகவே இருந்தது.

tnamythiriகுறிப்பாக தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து செல்லவும், நாட்டில் புரையோடிப்போயிருந்த இனச்சிக்கல்களின் உண்மைத் தன்மைகளையும் அவர்கள் புட்டுப்புட்டு வைத்தனர்.

மாமனிதர்களான ஜோசப் பரராஜசிங்கம், சந்திரநேரு, ரவிராஜ் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளை சர்வதேச ரீதியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதில் மாபெரும் பங்காற்றினார்கள்.

இலங்கை அரசாங்கத்திற்கு இது மிகப்பெரிய தலையிடியாகவே அமைந்திருந்தது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத இலங்கை இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும், திட்டமிட்ட முறையில் அவர்களை கொன்றொழித்தார்கள்.

படுகொலை செய்யப்பட்ட அந்நாடாளுமன்ற உறுப்பினர்களின் இழப்பு என்பது இன்றுவரை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகளை நாடாளு மன்றம்வரை கொண்டு சென்று தம் உயிர்களை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் தமிழ் இனத்தின் விடுதைலைக்காக அரும்பாடுபட்டார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கொல்வது என்பது மிகவும், இலகுவாக இருந்தது. தமது ஆட்சிக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சினைகளை வெளியுலகிற்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர்களை தீர்த்து கட்டும் நிகழ்வுகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்தினார்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்கள்.

tna_candidats_001அவற்றுக்கான விசாரணைகள் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் முடிவுகள் தான் கிடைக்கவில்லை.

தமிழ் இனத்தின் பேரம் பேசும் சக்திகளை இல்லாது செய்து தமிழ் இனத்தினை அரசியல் அநாதை இனமாக்குவதே இந்திய இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடாக இருக்கின்றதே தவிர, இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அவை அக்கறை கொண்டவையாக தென்படவில்லை.

தமிழர்களின் மிகப்பெரிய ஆயுதப் போராட்டத்தை சிதைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த இந்தியா அதற்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை 2009 இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆயுதப் போராட்டதினை நசுக்கிய பின்னர், இப்பொழுது தமிழ் மக்களின் குரலாய் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பவர்களின் அரசியல் பிரவேசத்தினை தடுத்து நிறுத்துவதற்கென்று வரிந்து கட்டிக்கொண்டு முன் வந்திருக்கின்றார்கள் இலங்கைப் புலனாய்வாளர்களும் இந்திய றோவும்.

குறிப்பாக விட்டுக்கொடுப்பில்லாத, தமிழ்த் தேசியத்தின் மீது அக்கறையுள்ள எவரும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க கூடாது என்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

இதனால் இலங்கையில் இயங்கக்கூடிய நவீன தொழினுட்ப வசதியைப் பயன்படுத்தி அவற்றினூடாக தமிழ் தேசியவாதிகள் மீது சேறுபூசும் செயற்பாட்டை ஆரம்பித்து விட்டார்கள்.

tna_govtஅரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்படுகின்ற நவீன தொழினுட்ப வசதிகளூடாக, தமிழின உணர்வாளர்களை கொச்சைப்படுத்தியும், அவர்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பிரித்தும், துணிச்சல் மிக்க அரசியல்வாதிகளை நாடாளுமன்றம் செல்வதையும் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்வுகள் இன்று நேற்றல்ல, ஒவ்வொரு தேர்தலின் போதும் இதையே இவை வாடிக்கையாக கொண்டிருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வட மாகாண சபைத் தேர்தல் நடந்த போது முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்கள் குறித்து அச்சமடைந்த ஆட்சியாளர்கள் இதே தொழினுட்ப வசதியைப் பயன்படுத்தி தேவையற்ற பிரசுரங்களினூடாக மக்களை குழப்ப பார்த்தார்கள். ஆனால் அவையாவும் கானல் நீராகிப் போயின.

இவ்வாறே, தமிழ் மக்கள் மத்தியில் குழப்பதினை விளைவித்து, அதனூடாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிலும், தேசியம் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்கள் மீதான சேறுபூசல்களை முன்னெடுத்து அழிப்பதே அவர்களின் இலக்கு.

புலிகளை அழித்ததன் பின்னர், தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பவர்களையும் இல்லாது செய்தால் இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு பிரச்சினைகள் குறைந்துவிடும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும், அதன் தலைமை மீதும் வைத்திருக்கின்ற பற்றையும் பாசத்தையும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தலின் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் தெட்டத்தெளிவாக தமது வாக்கெனும் ஆயுதத்தின் மூலம் வெளிக்காட்டுவார்கள் என்பதில் சிறிதேனும் மாற்றமில்லை.

இதுவரை காலமும் எந்தவித சுகபோக வாழ்க்கைகளுக்கும் அடிபணியாத பிரதிநிதிகள் யார் என்பதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பி வைப்பார்கள் என்பதிலும் ஐயம் ஏதுமில்லை.

தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பு என்னும் பாதையில் அத்தலைமைகள் அரசியல் பிரச்சினையை கொண்டு செல்வார்கள் என இன்றுவரை தமிழ் மக்கள் நம்புகிறார்கள்…. அதில் கல்லெறிந்து குழப்ப நினைக்கின்றார்கள் றோவும் புலனாய்வாளர்களும்…..!

முடிவு என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்…..!

எஸ்.பி.தாஸ்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: