வீழ்கின்றன கூட்டமைப்பு தலைமைகள்?

tna-leadersவட- கிழக்கெங்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பிரபலங்களிற்கு கிடைத்து வரும் எதிர்ப்பு கட்சி தலைமையிடையே கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வட்டுக்கோட்டை தொகுதியை இலக்கு வைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். எனினும் அவர் உள்வருவதற்கு பல கிராம அமைப்புக்கள் தடைவிதித்துள்ளன. நீங்கள் கதிரையிலிருந்து என்ன செய்துள்ளீர்களென்ற கேள்வி பல இடங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு பதிலளிக்க முடியாது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திண்டாடிவருகின்றனர். பெரும்பிரச்சாரங்களுடன் நேற்று கூட்டமைப்பினர் நெடுந்தீவிற்கு மேற்கொண்ட விஜயமும் வெற்றி பெற்றிருக்கவில்லை. வடமாகாணசபை தேர்தலில் வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை மற்றும் தீவகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய விந்தன் கனகரட்ணத்தை கைவிட்டமை காரணமாக மக்கள் பெரிதாக கூட்டமைப்பு குழுவை
எட்டிப்பார்த்திருக்கவில்லை.

திருமலையிலும் வீறாப்புடன் இருந்த சம்பந்தன் தற்போது அச்சங்கொள்ள தொடங்கியுள்ளார். தனது சக வேட்பாளர்கள் புலம்பெயர் தரப்புக்களுடன் இணைந்து குழிவெட்ட தொடங்கியிருப்பதாக அவர் நம்புகின்றார். அச்சம் காரணமாக அவர் தனது
கட்சி கொடியை நீண்ட இடைவெளியின் பின்னர் தூக்கி பிடிக்க தொடங்கியுள்ளார்.

வன்னியுட்பட பல இடங்களிலும் முன்னாள் போராளிகள் களமிறங்கியுள்ளதால் மக்கள் அவர்களை முன்னிலைப்படுத்துவதும் அச்சத்தை தர தொடங்கியுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: