தெரேசா கொக்கும் ரபிஸியும் போர்னியோ செல்ல மட்டுமே தடை

theresaஉள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி துவாங்கு  ஜாபார்  குடிநுழைவுத்  துறையின்  பயணக்  கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள  டிஏபி  சீபூத்தே  எம்பி  தெரேசா  கோக்கும்  பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லியும்  வெளிநாடுகள்  செல்ல  தடையில்லை என  தெளிவுபடுத்தியுள்ளார்.

வான்  ஜுனாய்டி  தம்மிடம் இதைத்  தெரிவித்ததாக  கொக்  மலேசியாகினியிடம்  கூறினார். ஆனால், கொக்  கிழக்கு  மலேசியாவுக்கு  மட்டும்  செல்ல  முடியாது. கிழக்கு  மலேசியா சொந்த  குடிநுழைவுச்  சட்டங்களைக்  கொண்டிருக்கிறது.

ரபிஸியைப்  பொருத்தவரை  அவர்  சரவாக்கில்  மட்டும்தான்  தடை  செய்யப்பட்டிருக்கிறார். சாபாவுக்கும்  மற்ற  வெளிநாடுகளுக்கும்  செல்லத்  தடை ஏதுமில்லை.

மலேசியாகினி  இதை  உறுதிப்படுத்திக்கொள்ள  வான்  ஜுனாய்டியைத் தொடர்புகொள்ள  முயன்று  வருகிறது.