
இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட யூலை இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த வருடத்துடன் 32 ஆண்டுகள் . ஓடிவிட்டன.
சிங்களத்தால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலை தமிழினப்படுகொலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலையாகும்.
1983 கறுப்பு யூலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
குறிப்பாக நேரடி இனப்படுகொலை என்ற வகையில் 1956ஆம் ஆண்டு யூன் மாதம் 5ஆம் தேதி கல்லோயாவில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 156 தமிழ் விவசாயக் குடும்பத்தினர் போலீசாரின் அனுசரணையுடன் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டது தொடங்கி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 145,000 அப்பாவி ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக சிங்கள இராணுவத்தினரால் விமான குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலம் இனப்படுகொலை செய்யப்பட்டது வரை இதன் தொடர் இனப்படுகொலைகளைப் பட்டியலிடலாம்.
ஆதலால் 1983 கறுப்பு யூலை இனப்படுகொலையின் தொடாச்;சியும் வளர்ச்சியும் அதன் முக்கிய கட்டமுமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாகும். கறுப்பு யூலை இனப்படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பிரித்தோ, தனிமைப்படுத்தியோ பார்க்கமுடியாது. இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பது மட்டும் ஒரேவழி என்ற உறுதியினை இக் கறுப்பு யூலை நினைவு நாட்கள் நமக்கு வழங்கட்டும்.
அதே மனஉறுதியோடு இந்நாளில் எமது தனிப்பெரும் பொறுப்பினைச் செயற்படுத்தும் முயற்சிக்காக எம்மை அர்ப்பணிப்போமாக, தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்
-http://www.pathivu.com


























மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் தமிழர்கள் பிற மக்களோடு ஒற்றுமையாக வாழும் பொழுது நீங்கள் ஏன் சிங்கலவர்கோளோடு சேர்த்து வாழ முடியாது……..
டேய்! மலாயன் பாலஸ்தீனியர்கள் ஏன் இஸ்ரேலியர்களிடம் சேர்ந்து வாழ முடியாதோ அதே காரனதிர்க்காகதான் ஈழ தமிழர்களும் சிங்களர்களோடு சேர்ந்து வாழ முடியாது!!!! டேய் உன்னோடு அந்த புத்தியை இங்கு காட்டாதே!!!
கொழும்பில் லட்சகணக்கான தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்த்து வாழும் பொழுது ஏன் பிற இடத்தில் வாழ முடியாது……. அதான் உங்களை அடுமையாக வைத்து இருந்த விடுதலை புலிகளைத்தான் அளித்து விட்டார்களே இனி நீங்கள் நிம்மதியாக வாழலாமே…….
குளிக்காத நாத்தம் புடிச்சபய யாருக்குடா அறிவுரை சொல்லுற!!
அது அந்த மக்களோட சொந்த தாய்மண் ..தமிழன் ராவணன் ஆண்ட மண் .. உம்மைபோன்று தமிழன்கூட ஓட்டிகிட்டவந்தான் உன் உறவுக்கார சிங்களன்
இஸ்ரேலில் யூதர் பகுதியில் 20% பாலஸ்தீன இஸ்லாமியர்கள் வாழ முடியும்போது, ஏன் காசா மற்றும் மேற்கு கரை பகுதி முஸ்லிம்களால் இஸ்ரேல் நாட்டுடன் சேர்ந்து இருக்க முடியாமல் தனி சுதந்திர நாடாக செல்ல விரும்புகிறார்களோ, அதே போல்தான் வட கிழக்கு பகுதி ஈழ தமிழர்களும் தனித்து போக விரும்புகிறார்கள்!!!! டேய் மலாயன் உங்கள் இதெல்லாம் அங்க போய்வச்சிக்க எங்க வம்புக்கு வராதே!!!!
நான் பல இலங்கை தமிழர்களை சந்தித்து உள்ளேன் அவர்கள் சிங்களவர்களோடு சேர்த்து வாழத்தான் விரும்புகின்றனர் அப்போ யார் எதிர்கின்றனர் என்று அவர்களிடம் கேட்டேன் அதற்க்கு அவர்கள் சொன்ன பதில் நியாயமானதாக இருந்தது ஆம் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தான் அதற்க்கு முழு காரணம் அப்படி இலங்கையில் அமைதி திரும்பினால் அவர்கள் அனைவரும் திரும்பி இலங்கைக்கு அனுப்ப படுவார்கள் அப்படி திரும்பினால் அங்கே அவர்கள் வாழும் ராஜ வாழ்க்கையை இழக்க நேரிடும்……… இதான் உண்மை
யாரும் யாருடனும் வாழ முடியும் — எல்லாருக்கும் சம உரிமை இருந்தால்– அத்துடன் ஈழ தமிழர்கள் முதல் மக்கள் சிங்களவர்கள் பிறகு வந்தவர்கள். தமிழ் நாடு பக்கத்தில் இருந்த காரணத்தினால் பெரும்பாலோர் ஈழ மக்களாக வில்லை– சொந்த நாட்டில் ஏன் இரண்டாம் மக்களாக வாழவேண்டும்? இங்கு நடப்பதைபோல் அங்கும் நடக்க வேண்டுமா? நம்மை சிறுக சிறுக சாக்கடையில் தள்ளி நார வைத்தது போல் அங்கும் நடக்க வேண்டுமா? எல்லாமே திமிரின் காரணம். அதிலும் புத்தர் வழி கடைபிடிக்க வேண்டிய இந்த ஈன ஜென்மங்கள் செய்யும் ஈன செயலகளுக்கு அளவே இல்லை. பக்கத்தில் இருந்த கேடு கெட்ட தமிழர்கள் என்று கூறும் இந்தியர்களும் வடக்கத்தியனுங்களும் சேர்ந்து நம் உடன் பிறப்புகளை இந்த அவல நிலைக்கு கொண்டு வைத்துள்ளனர்.
MALAYAN ஐயா சிங்கபூர்,இந்தியா, மலேசியாவில் தமிழர்கள் ஒத்து வாழ்கிறார்களா? சிங்கபூர், இந்தியாவைப்பற்றி என்னால் விமரிசிக்க முடியாது. ஆனாலும் அங்கு நமக்கிருக்கும் வசதிகளும் உரிமையையும் ஞாயமாக இருக்கிறதா என்பது கேள்வி. சிங்கையில் திறமைக்கு மதிப்பு அதிகம். ஆதலால் திறமையானவர்கள் யாராய் இருப்பினும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றனர். மலேசியாவில் நிலைமை அப்படியல்ல. அரசியல் பலம், இன எண்ணிக்கை பலம் ஆகியவைகளால் மற்ற சிறுபான்மை இனத்தவர்கள் புரம்தள்ளப்படுகிரார்கள். சிங்கையில் ‘திரு பிள்ளை’ என்றொருவர் தனது தனித்திறமையால் சிங்கப்பூர் விமான நிறுவனத்தை தற்போதைய நிலைக்கு உயர்த்தியுள்ளார். தற்பொழுது அவர் வத்திகான் நகரில் உயர்தர பொருளாதார அதிகாரியாக உள்ளார். அவரைப்போல் மற்ற இன திறமைசாலிகள் மலேசியாவில் பயன் படுத்தப்படவில்லை அல்லது வாய்ப்பு வழங்கப்படவில்லை. அன்று அறிஞர் அன்ன கூறினார், ” மியன்மார், இலங்கை போன்ற நாடுகளின் தமிழர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் மலயவில்தான் வாழ்கிறார்கள்” என்று. இன்று அதே அறிஞர் அண்ணா வந்தால் நம்மையும் மியன்மார், இலங்கை தமிழரோடு சேர்த்திருப்பார். இங்கு நாம் மிகவும் சிறுபான்மை இனம். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. சேர்ந்து வாழ்ந்து பகிர்ந்து வாழ தமிழர்க்கு விருப்பம்தான் ஆனால் அவர்களை அப்படி ஏற்று வாழ மற்ற இனத்தவருக்கு பிடிக்கவில்லையே. அவனுடைய கோவணத்தை கூட உருவ முயன்றால் என்ன செய்வது? எந்த மிருகம் கூட தான் தப்பிக்க வாய்ப்பிருக்கும் வரை ஓடும். மேலும் பதுங்கவோ ஓடவோ வாய்ப்பில்லாத சமயத்தில் தனது கடைசி முயற்சியாக தன்னை துறத்துபவரை எதிர்த்து போராடும். மலேசியர்களின் நிலைமை நாளுக்கு நாள் தரம் குறைந்துகொண்டிருக்கிறது. இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
அடேய் லாலான் புல்லு!!! இலங்கையில் வாழும் 25 லட்சம் ஈழ தமிழர்களிடமும் நீ போய் பேசிப்பார்த்தா? அல்லது அவர்கள் அனைவரும் அல்லது 50% மேல் உன்னிடம் வந்து தாங்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சொன்னார்களா???? டேய் நீ எங்க இனத்து விசையத்தில் தலையிடாதே!!!! ஓடிப்போயிடு ……. மரியாதைய சொல்லிபுட்டேன்!!!!
தமிழனுக்கு தனி நாடு மட்டுமல்ல நீதியும் கிடைக்கவேண்டும்….
MALAYAN நண்பரே ஈழமக்கள் சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியாது என்று 1974லில் வட்டுக்கோட்டை மாநாட்டில் ஐயா தலைவர் செல்வா தலைமையில் முடிவு எடுத்தது உமக்கு தெரியவில்லை போலும்.சாலை ஓரத்தில் ஒன்னும் தெரியாத மண்ணுகிட்ட கேட்ட கருத்தை இங்கே வைப்பதை தவிர்க்கவும்.1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கைமீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது.1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி (சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டைமீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.வரலாறு தெரியாமல் கருத்து வைப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.மலையான் நண்பரே போய் விக்கிபீடியா பாரும் .
வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது.
வட்டுக்கோட்டை பிரகடனம்.
ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்