இனப்பிரச்சினை தீர்வுக்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: மங்கள சமரவீர

mangala-samaraweeraஇலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில் காண முடியாது. புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமே அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ வழி ஏற்படும்.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் பறங்கியர் அனைவரும் இலங்கையர்களாக வாழக் கூடிய இலங்கையர்கள் எனும் அடையாளத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்.

நாட்டில் சிறுபான்மையினரும் ஆட்சி அமைப்பில் சில முடிவுகளை எடுக்கக்கூடிய வகையிலும், அவர்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

அப்படியான அரசியலமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை அனைத்து இனத்தவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக அந்த தீர்வு அமைந்திருக்க வேண்டும். அப்படியானதொரு சூழலில் பல்லினத் தன்மையுடன் அனைவரும் தாங்கள் இலங்கையர் என்பதை உணர்ந்து பெருமையுடன் வாழமுடியும்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: