இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அறிவித்தது. இது தொடர்பில் கெலம் மக்ரே தெரிவிக்கையில்,
இந்த ஆவணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த ஆவணம் ஐநா இலங்கையுடன் இணைந்து உருவாக்கியது போல் தோன்றுகிறது.
இலங்கை இராணுவ படைகள் நடத்திய தாக்குதலிலேயே, பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது போன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது .
இதிலிருந்தே தெரிகின்றது திட்டமிட்டு ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து ஒரு போர்க்குற்ற அறிக்கையை தயாரித்திருக்கின்றது – இந்த ஆவணத்தின் மூலம் ஐநாவின் நீதி விசாரணை நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
நடந்தது வெறும் போர்க் குற்றமில்லை; திட்டமிட்ட இனப் படுகொலை; இந்த உண்மையும் ஐ நா விற்கு தெரியவில்லையா? அப்படியென்றால், போர்க் குற்றத்திற்கும், இனப் படுகொலைக்கும் என்னதான் வேறு பாடு? 2வது உலகப் போரின் போதே வல்லரசு நாடான அமெரிக்கா பகை நாடான ஜெர்மனி, ரஷ்யாவையே ஆகாயத்திலிருந்து தெளிவாக வேவுப் பார்த்தார்களே! ஆனால் இன்று இந்த 21ம் நூற்றாண்டில் தொழில், தகவல் நுட்பங்கள் மிக விரைவாக வளர்ச்சிக் கண்டக் காலத்தில், இலங்கையில் போர் நடந்த நேரத்தில் நடந்தது என்னவென்று நிச்சயமாக வல்லரசு நாடுகள் அனைத்திற்கும் நன்றாகத் தெரியும். ஆசியாவிலேயே செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் கோள் அனுப்பிய முதல் நாடு என்றப் பெருமையைப் பெற்ற இந்திய அரசுக்கு இந்த உண்மைகள் நன்குத் தெரியும். தெரிந்தும் தமிழக மக்களை இளித்தவாயர்கள் என்றெண்ணி இன்றைக்கும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதேன்? ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் மேலிருந்த மரியாதையும் போய்விட்டது. தமிழக மக்களின் மேல் வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் போய்விட்டது. தமிழக மக்கள் இலங்கை மேல் ஐ நா மூலம் சுதந்திரமான உண்மையான பன்னாட்டு போர்க் குற்ற விசாரணையை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு உறுதியான அழுத்தம் கொடுத்தால் நிச்சயமாக ஈழத் தமிழர்களுக்கு நல்ல நீதிக் கிடைக்கும். செய்வார்களா? முதலில் இதை செய்துக் காட்டுங்கள்!