அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தலி;ல் தமக்கு நம்பிக்கையில்லை என்று நாடு கடந்த தமிழீழ பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றத்துக்குள் தமிழர்கள் செல்வதனால், சிங்கள பௌத்த இனவாத சிந்தனைகளை மாற்றமுடியாது என்று ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றமே தொடர்ந்தும் சிங்கள இனவாதத்தை முன்கொண்டு செல்வதை தமிழர்கள் அறிவார்கள்.
நாடாளுமன்றத்தில் 6வது அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்வதன் மூலம் தமிழர்களின் கருத்து சுதந்திரத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மூலம் சிங்கள அரசாங்கங்கள், சிங்கள பௌத்த பெரும்பான்மையினரை பாதுகாக்கின்றன.
இந்தநிலையில் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டலை ஏற்படுத்துவதன் அடிப்படையில் 2016க்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண தமிழ் தலைவர்கள் முயலவேண்டும் என்றும் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com