21வீதமாக இருந்த தமிழர்களின் வீதாசாரம் இன்று 17.6 வீதமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? என்பதனை முதலில் ஆராயவேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிடமும் தங்கியிருக்கின்றதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 7.30 மணியளவில் ஆலையடிவேம்பு கிராமத்தில் செல்வப் பிரகாஸ் தலைமையில் தேர்தல் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்,
நாங்கள் இந்த நாட்டில் உள்ள பேரினவாத சக்திகளின் சூழ்ச்சியின் காரணமாகத் தான் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டோம் இதற்கு இந்த நாட்டில் மாறிமாறி வந்த இரண்டு அரசுமே முழுப்பொறுப்புமாகும்.
அன்று 21வீதமாக இருந்த தமிழர்களின் வீதாசாரம் இன்று 17.6 வீதமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? என்பதனை முதலில் ஆராயவேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிடமும் தங்கியிருக்கின்றது.
எமது நாட்டில் நடைபெற்ற யுத்தமும் பிரதான மூலகாரணமாக அமைவதோடு, திட்டமிட்ட இன அழிப்புமே இவ்வாறு எமது இனம் அழிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு அழிக்கப்பட்டதன் பின்னனி என்ன? இதனை யார் செய்தார்கள் என்பதனையும் தெரிந்திருக்கவேண்டும்.
இந்த நாட்டில் இருக்கின்ற பேரினவாத அரசாங்கங்களே நன்கு திட்டமிட்டு அனைத்தையும் செய்தார்கள். இதனை மறந்த எமது தமிழ் இனம் இன்று தமிழ்க் கிராமங்கள் தோறும் பச்சை, நீலக்கொடிகளைக் கொண்டு காரியாலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கமுடிகின்றது.
தமிழ்மக்களை பொறுத்தவரையில் எந்தப்பிரச்சினை வந்தாலும் அதனை முகங்கொடுத்து அவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வல்லமை எந்தப்பேரினவாதக் கட்சிக்கோ,
முஸ்லிங்களுக்கோ இல்லை.
அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் அனைத்து மக்களும் தேர்தல் காலத்தில் விழிப்பாக இருந்து செயற்படவேண்டும். எமது இனம் பல அடக்கு முறைகளுக்குள் தள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்ற ஒரு இனம்.
எமது போராட்டம் ஆயுத ரீதியாக வீறு நடைபோட்டு மௌனிக்கப்பட்டு இருக்கின்றபோதும் அதனொரு வெளிப்பாடாகவே இன்று சர்வதேச அங்கிகாரத்துடன் எமது மக்களுக்கான விடிவை நோக்கி
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.
2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட போராட்டத்தில் எமது உறவுகள் போராளிகள் என்று எத்தனையோ ஆயிரம் பேர் தங்களது உயிரினை தியாகம் செய்தார்கள். அந்த தியாகங்களுக்கு நாங்கள் செய்யும் பிரதி உபகாரம் என்ன?
தமிழர்களது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக இம்முறை த.தே.கூட்டமைப்பு சின்னமான வீட்டிற்று முதலில் உங்களது வாக்கினை அளித்து நீங்கள் விரும்பும் நேர்மையான தமிழ்த் தேசிய பற்றுள்ளவரை தெரிவு செய்யமுன்வரவேண்டும் எனவும் கூறினார்.
-http://www.tamilwin.com