சசிபெருமாலின் இறந்துபோன உடலைவாங்க அய்யா வைக்கோ நேற்றுமுதல் தன்னை மறந்த நிலையில் தவம் இருந்துகொண்டு இருக்கிறார். அவர் இந்த இனத்திற்காக இரவும் பகலும் உழைப்பதை பார்க்கும் போதும், அதற்காக இன்றுவரை இந்த இனம் அவருக்கு எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கும் “கில்ட்டியாக” பீல் பன்னல.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
2009 இல் முத்துக்குமார் இறந்துபோகிறார். முத்துக்குமார் சாம்பலை தமிழகம் முழுவதும் எடுத்துசென்று ஒரு உணர்வலையினை உருவாக்க திட்டமிட்ட போது, “தலைவர் வீட்டு வழியாக இதை கொண்டுசெல்லவெண்டாம், தலைவர் வருத்தபடுவார்” என்று சொன்ன சுபவீயை பார்த்து வைக்கோ எதுவும் சொன்னாரா ?. அங்கு எழுந்த உணர்வலைகளை அப்படியே தனதாக்கி கொள்ள நினைத்து “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை” என்று முத்துக்குமார் எழுதிய தமிழ்தேசிய வரிகளில் தோற்று நின்றார். முத்துகுமாரின் பிணத்தில் அரசியல் செய்ய நினைத்து தோற்றுப்போனார்.
முள்ளிவாய்க்கால் முற்றம் வைக்கோ-நடராஜன் மற்றும் நெடுமாறன் இவர்களை கொண்டே அடிக்கல் நாட்டப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை வேலைநடக்கும் போது மாதம் ஒருமுறை சென்று பார்ப்பவர் வைக்கோ. நெடுமாறன் மற்றும் உலகதமிழர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவும் ஈழம் என்ற உன்னதத்திர்ககாகவும் அண்ணன் சீமான் அங்கு சென்று பார்த்தபிறகு, வைக்கோ அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டார். திறப்புவிழாவின் மூன்றுநாள் நிகழ்வில் முதல்நாளிலேயே அண்ணன் சீமானும், அய்யா வைக்கோவையும் பேசவைத்துவிட வேண்டும் என்று விரும்பினார் அய்யா நெடுமாறன். அண்ணன் சீமான் சம்மதித்ததும் அய்யா வைக்கோ சம்மதிக்கவில்லை. “சீமான் முதல்நாள் பேசினால், நிகழ்விற்கு வரமாட்டேன்” என்று சொல்ல அண்ணன் அடுத்த நாள் பேசினார்.
அந்த நிகழ்வின் முதல்நாள் மாலைநேரே அரங்கு துவங்குவதற்கு முன்னமே வந்த அண்ணன் பார்வையாளர்களில் ஒருவராக கடைசியில் அமர்ந்து இருந்தார். இதை அறிந்துகொண்ட அய்யா நெடுமாறன், நடராஜன் எல்லாம் எவளவோ வற்ப்புறுத்தி அழைத்தும் அண்ணன் சீமான் மேடையேறவில்லை. அன்று வைக்கோ மேடையில் பேசியதை கேட்டால் தற்பெருமையின் உச்சம். உங்களில் யாருக்கேனும் அய்யா வைக்கோ அங்கு பேசியதையும் அண்ணன் சீமான் பேசியதையும் ஒப்பிட்டு பாருங்கள். பேச்சும் ஒருவகை ராணுவம் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். இதை உணர்ந்த தமிழக உளவுபிரிவு சீமான் பேசிய அன்று இரவே எல்லா ஒலிவாங்கிகளையும் உடைத்துவிட்டு சென்றது போலீஸ். முள்ளிவாய்க்கால் முற்றம் விழாவிற்கு வரும் வைக்கோ மதிமுக சார்பில் எந்த இடத்திலும் விளம்பர பதகையோ சுவரெழுத்தொ இல்லை. ஏனனில் ஜெயாவுடன் கூட்டணி பேச்சு இறுதி செய்யப்படாத நிலையில் அவர் எந்த முடிவையும் தஞ்சை மாவட்ட மதிமுக சார்பில் செய்ய அனுமதிக்கவில்லை என்ற உண்மையை அறிவோம். ஈழம் உயிரின் உணர்வை அரசியலாய் பார்க்கும் பிணந்திண்ணி அய்யா வைக்கோ அவர்கள்.
அடத்ததாக அய்யா நம்மாழ்வார் அவர்கள்… மீத்தேன் பிரச்சனையில் தஞ்சையில் எல்லோரையும் அரவணைத்தே சென்றவர் அய்யா நம்மாழ்வார். அய்யா வைக்கோ அவர்களுக்கும் நம்மாழ்வார் அய்யாவிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் கிடையாது. அய்யா நம்மாழ்வார் இறந்து போன இறுதி சடங்கில் ஏன் வைக்கோ கலந்துகொள்ளவில்லை ? திருச்சி இளைஞர் பாசறை பேரணியை துவங்கி வைத்தவர், நாம்தமிழர் கட்சி நடத்திய குடவாசல் மீத்தேன் திட்ட எதிர்ப்பு உண்ணாவிருதத்தில் கலந்துகொண்டவர், பழனியில் நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். நாம்தமிழர் நிகழ்வுகளில் அய்யா நம்மாழ்வார் கலந்துகொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக வைக்கோ நம்மாழ்வாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் இறந்து போனபிறகு காவிரி டெல்ட்டா சுற்றுபயணம் என்ற பெயரில் “வாழும் நம்மாழ்வாரே” என்று தஞ்சை நகரம் முழுமைக்கும் பதாகைகளை வைத்து நம்மாழ்வாரின் தியாகத்தை அரசியல் அறுவடை செய்ய பார்த்தவர் அய்யா வைக்கோ. அதிலும் தோற்றுபோய் அவமானப்பட்டு நின்றவர் வைக்கோ.
அய்யா அப்துல்கலாம் இறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக நரேந்திர மோடியை சந்தித்த வைக்கோ, ஆந்திராவில் இருபது பேர் படுகொலைக்கு நீதிகேட்டு போனேன். மக்களெல்லாம் உங்களை திட்டுகிறார்கள் என்று சொன்னேன் என்று வந்து புலுகினார். சரி சந்திரபாபு நாயிடு உங்களின் நெருங்கிய நண்பர், பரஸ்ப்பர குடும்ப விழாக்களில் கலந்துகொள்பவர்கள் என்ற உரிமையில் அய்யா வைக்கோ அவர்கள் நேரடியாக சந்திரபாபு நாயிடுவை சந்தித்து 20 தமிழர்கள் இறப்பிற்கு நீதிகேட்டு இருக்கலாமே ?. இறந்த 20 தமிழர்கள் பிணத்திலும் அரசியல் செய்ய நினைத்தவர் அய்யா வைக்கோ தோற்றுபோனார்.
இரண்டு நாள் முன்னதாக திட்டிய இன எதிரி மோடியை அப்துல்கலாம் அண்ணனிடம் எப்படி சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்த முடிகிறது ? பாரத பிரதமர் நரந்திர மோடிக்கோ, அல்லது காங்கிரஸ் ராகுல் காந்திக்கோ கட்டாயம் மொழிபெயர்ப்பு செய்து விடயங்களை விளக்க ஆள்கள் உடன் வந்து இருப்பார்கள். அந்தவேலையை அய்யா மொடி ஏன் செய்தார் ? வழக்கம் போலவே தனது பிணம்திண்ணி அரசியலில் ஆதாயம் தேட நினைத்து அங்கேயும் தோற்றுபோனார்.
தனது மகன் ITC (Imperial Tobacco Company) ஏஜென்ட். தனது பெயரிலேயே டொபாக்கோ என்று உள்ள நிறுவனம், வைக்கோவே ஒத்துக்கொண்ட பிறகும், புகையிலை பொருள்கள் விற்பதில்லை என்று சப்பைக்கட்டு வேறு மதிமுக மக்கள். தனது மகன் போதைப்பொருள் வியாபர ஏஜென்ட், தமிழகத்தில் உள்ள 11 சாராய தொழிற்ச்சாலைகளில் 11 திமுகவினருடையது. தனது அரசியல் சுயலாபத்திற்க்காக இவர்களை பற்றி எதுவுமே பேசாத வைக்கோ சசிபெருமாலின் பெயரை சொல்வதற்கோ, அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவோ என்ன தகுதி இருக்கு ? முகத்திற்கு நேராக திட்டிய மோடியிடமே இரண்டுநாட்களில் சிரித்து சிரித்து பேசிய வைக்கோ எதுவுமே பேசாத என் அண்ணன் சீமானை கண்டவுடன் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ? இன்னொருவர் இடம்கொடுக்க எழுந்தபோது வம்படியாக அவரின் கையைப்பிடித்து அமரவைக்கவேண்டும் ? இதுவும் பிணந்தின்னி அரசியலின் நீட்சி.
நெடுங்காலமாக மது ஒழிப்பிற்காக போராடி காலத்திலேயே உயிர்விட்ட அய்யா சசிபெருமாளின் இறப்பின் தியாகத்தை ஆவமதிக்க போதைப்பொருள் விற்பனை பிரதிநிதியின் தகப்பனாரான அய்யா வைக்கோ அவர்களும், தமிழ்நாட்டில் 11 சாராய தொழிற்ச்சாலைகளை வைத்துள்ள திமுகவின் தலைமை ஸ்டாலினும் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போலவே ஒரு தமிழனின் தியாக பிணத்தின் மீது திராவிட அரசியல் கழுகுகள் கொத்தி தின்றுகொண்டு இருக்கிறது. இதற்க்கு முதன்மையானவர் வைக்கோ.என்கிற வையாபுரி கோபாலசாமி நாய்டு.
–தமிழர் எழுச்சிப்பறை
ஐயா Anonymous அவர்களே, சார்லஸ் அந்தோனி பிரபாகரனின் நெருங்கிய நண்பன் ஆரம்பகால போராளி ஒரு தாக்குதல் கட்டத்தின் போது பிரபாகரனை காப்பாற்றி தன்னுயிரை விட்டவன் என்பது எமக்கும் தெரியும்! அவன் நினைவாக தன் மூத்த மகனுக்கு அந்த பெயரை விட்டார் என்பதும் தெரியும்!
“ஈழ போராடம் பற்றி பேசுகின்றன ,,,இது காலம் ..ஈழ தமிழர் படுகொலை பற்றி கேலி பேசி மகிழும் நீ……” உண்மைதான் ஐயா Anonymous அவர்களே யார் பேச்சையும் நாங்கள் கேட்கமாட்டோம், உலக அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள் என்று அன்டன் பாலசிங்கம் சொன்னால்கூட கேட்க மாட்டோம், ராஜீவ் கொலையை பற்றி தங்களின் கருத்தை நிலையை ஆழமாக தெளிவு படுத்த தவறியமை உலகின் கண்களுக்கு புலிகள்தான் ராஜிவை கொன்றார்கள் என்ற பார்வை உலக நாடுகளுக்கு உருவானது குறிப்பாக இந்தியாவிற்கு! அமெரிக்காவே தன் ராணுவத்தை அனுப்பினாலும் நாங்கள் தோற்கடிப்போம் என்று ராஜதந்திரம் தெரியாமல் வெறும் ஆயுத பலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திர்கள்!!!! இன்னும் பல விசையங்க்களில் கோட்டை விட்டதால் இன்று நாங்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு உங்கள் ஈழ போராட்டமும் உங்கள் மலையாள தலைவரும் வந்துவிட்டனர்…………..
அவரவர் அடையாளம் தெரியால் இருக்க ‘Anonymous’ – ஆக வரும் அன்பர்களே, இதுநாள் வரை ஈழப் பிரச்சனை என்று வந்தவுடன் வரிந்துக் கட்டிக் கொண்டு ஆஹா ஓஹோ எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் என்றெல்லாம் வக்காலத்து வாங்கி வேறெங்கோ வாழ்ந்த நல்ல தென் இண்டிய தமிழர்களையும் வசைப் பாடினீர்கள். இப்பொழுது உண்மையைப் பிரித்தெடுத்து எழுதும் போது ஏற்றுக் கொள்ளமாடேங்குது இந்த பாழாய்ப் போன அசல் தமிழனின் மனம். அசல் தமிழன் என்று உரக்கக் கூவி, நகல் தமிழனை அடையாளம் காட்டியபோது கண் விழி பிதுங்கி நிற்பது தெரியுது. பேசுவதுதறியாது மலைத்துப் போய் நிற்பதும் தெரியுது. அங்கே நின்று பேசு இங்கே நின்று பேசு என்று சவடால் விடுவது எதற்கு? அன்பு நெறியில் நிற்க வேண்டிய அசல் தமிழரை, நகல் தமிழரானோர், மனித வெடிகுண்டாக்கி அப்பாவி மக்களை கொன்றபோது நமக்கு சிந்தனை ஆற்றல் எவ்வளவு மழுங்கி போயிருந்தது பார்த்தீர்களா? இன்று ISIS – யை வசை பாடும் நாம் அன்று செய்தது என்ன? யார் வழிகாட்டுதலால்? நகல் தமிழர், அன்பு வழித்தமிழரை அசூரனாக்கியது எவருடைய பயனுக்காக? மலை நாட்டு இலங்கைத் தமிழர்களின் 13,14 வயது குழந்தைகளைக் கடத்தி வந்து AK 47 – னை கையில் கொடுத்து பயிற்சி கொடுத்து உயிர் மாள வைத்தது யாருக்காக? இன்று வெளி நாட்டில் இனிதே சுகமான வாழ்க்கை வாழ்வோருக்காக. போரில் போரிட்டு பெருமளவில் உயிர் இழந்தது இலங்கையின் மலைவாழ் தமிழர்களின் இளந் தலைமுறை!. இதில் குளிர் காய்ந்தது யார்? ஏவுகிறவனுக்கு வாய்ச் சொல், செய்கிறவனுக்கு தலைச்சுமை?. இதுதான் நடந்து முடிந்த ஈழப் போரின் கதைச் சுருக்கம். இங்கே ‘Anonymous’ – ஆக வருவோர் வாயை மூடிக் கொண்டிருந்தால் விரிவாக்கம் வராது.
மீன் குஞ்சி அண்ணா,தனி தமிழ் ஈழம் அமைய எவ்வாறு உங்கள் கருத்துக்கள் உதவும் என்று சில வரிகள் ….
அறிவில் சிறந்த தமிழன் தெலுங்கர்களிடமும் ஆரியர்களிடமும் எப்படி வீழ்ந்தோம் என்பதை நாம் பார்க்கவேண்டும் …
தமிழர்களின் இந்தசிறிய அளவிலான எழுச்சியை சிதைக்க பலசதிகள் நடக்கிறது.. தமிழக தமிழர்களை கொச்சைபடுத்தியும் ஈழ போராட்டத்தை இழிவுபடுத்தியும் செய்திகளை பரப்புகிறார்கள் ..
முகநூலில் இந்திய உளவு அமைப்பால் பைற்றுவிக்கபட்ட சில ஈழத்தமிழர்கள் ஏன் முன்னாள் போராளிகளும் சிலர் அடக்கம் தமிழக தமிழர்களை கொச்சைபடுத்தி பதிவுகள் இடுகிறார்கள் ..
நாம் தமிழர் எழுச்சியை சிதைப்பதே இவர்களின் நோக்கம்.
திராவிடம் பேசிய தெலுங்கர்கள் சொல்கிறார்கள் சீமான் ஒரு மலயாளியாம் ! (திராவிடர்கள் என்றால் தெலுங்கு /மலையாளம் /கன்னடம் /தமிழ் .திராவிடர்கள் நாம் என்று சொல்லி தமிழனை ஆளும் மற்றவர்கள் சீமான் மலையாளி என்றால் அவரும் திராவிடர்தானே தெலுங்கர்களான உங்களை ஏற்கும்போது அவரை தமிழர்கள் தலைவனாக ஏற்பதில் சிக்கல் இல்லையே…
சீமானின் உண்மை பெயர் சைமனாம் ! கிறிஸ்தவராம் ! ஆதாரங்கள் வேற முகநூலில் காம்பிகிறார்கள்! ஒருதமிழன் தலைமை பதவிக்கு வந்தால் வன்னியர் கட்சி /நாடார் /பறையன் /பள்ளன்/ ! எப்படி தமிழர்களை காயடிகிறார்கள் என்பதை உலகத்தில் வாழும் தமிழர்கள் அறியவேண்டும் .. சிலாங்கோர் முன்னாள் ஆட்சிக்குழுவில் தமிழரான சேவியர் மிகவும் துடிப்போடு பல நற்காரியங்களை செய்தார் என்பதை தமிழ் மேல் காதல்கொண்ட அனைவரும் அறிவர் .. கிறிஸ்தவர் வரகுடாதென்று சுல்தானிடம் சென்றவர்களை நாம் பார்க்கவேண்டும் !
தமிழர்களின் எழுச்சியை சிதைக்க மதம் /சாத்திய மோதல்களை உருவாக்க பலர் களமிறக்க பட்டுள்ளனர் ..
தமிழர்களிடம் பலவீனம் அதிகம் ..நம் பலவீனத்தை களையவேண்டும் நாம் தமிழர்களாக
உசிலம்பட்டி …குப்பத்தில் இருந்து துள்ளும் மயிராய் மீன் குஞ்சு ..இலங்கையில் இன்றும் சிங்களவர்கள் புலிகள் வருவார்கள் என்ற பீதியுடன் வாழ்கின்றார்கள் …தற்சமயம் நடக்கும் தேர்தல் கூடங்களில் எதிர்கட்சி பதவிக்கு வந்தால் சிங்களவர்கள் வட -கிழக்கு போக விசா எடுக்கவேண்டும் என்று மேடைகளில் பேசபடுகின்றது ..புலிகள் முழுதாக அளிக்கப்படவில்லை என்று சிங்கள அரசு மாத்திரம் அல்ல அமெரிக்க ..சீன அரசுகள் நன்கு அறியும் ..காரணம் புலிகளின் கட்டமைய்பு அப்படி …நீங்கள் தொடந்து உங்கள் கற்பனை குதிரையை ஓட்டலாம் ..கொல்லம் ..கேரளா என்று …வாழ்த்துக்கள்
@தேனீ
ஈழ மக்கள் மதித்த.. மதிக்கும் ஒரே ஒரு தமிழ் நாட்டு அரசியல் வாதி மறைந்த மா மனிதர் திரு .M :G :R ..பிறப்பால் தமிழர் இல்லாதபோதும் ..ஈழ போராட்டத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி ..எந்த விளம்பரமும் இன்றி உதவி செய்த பெரிய மனிதர் அவர் ..பதவியில் இருந்த பொது ஒரு தமிழன் கொள்ள பட்டால் கூட ..விமானம் எடுத்து இந்திய பிரதமரை சந்திக்க பறந்தவர்
பகுத்தறிவு பகலவனை என்றோ ஈழ மக்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள் ..பலரிடம் சொல்லி புலம்பி இருகின்றது ஈழ மக்கள் தன்னை மதிப்பது இல்லை என்று …இலங்கையல் ஆக குறைந்த கல்வி GRADE 9 ..தமிழர்கள் GRADE 12 …பகுத்தறிவு இல்லாமல் அவர்களால் சிந்திக்கமுடியும் .உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
@தமிழ் எழுச்சி பறை
ஆசியாவில் முதல் பைபிள் புத்தகம் தமிழ் மொழியிலே வெளியிடபட்டது ..இந்த காலகட்டத்தில் …பகுத்தறிவு ..சுயமரியாதை வியாபாரிகள் பிறக்க கூட இல்லை ..ஆனால் இந்த தமிழ் வியாபாரிகளின் கொசு கடி சகிக்க முடியவில்லை இன்று எதோ இவர்கள் தான் தமிழ் மொழியை கண்டுபிடித்து மாதிரி அல்லவா கூவுகின்ரர்கள்
இலங்கையில் இன்றும் சிங்களவர்கள் புலிகள் வருவார்கள் என்ற பீதியுடன் வாழ்கின்றார்கள் …தற்சமயம் நடக்கும் தேர்தல் கூடங்களில் எதிர்கட்சி பதவிக்கு வந்தால் சிங்களவர்கள் வட -கிழக்கு போக விசா எடுக்கவேண்டும் என்று மேடைகளில் பேசபடுகின்றது ..புலிகள் முழுதாக அளிக்கப்படவில்லை என்று சிங்கள அரசு மாத்திரம் அல்ல அமெரிக்க ..சீன அரசுகள் நன்கு அறியும் ..காரணம் புலிகளின் கட்டமைய்பு அப்படி …(Anonymous)
ஹ…ஹ..ஹா……..என்ன புலிகள் மீண்டும் வருகிறார்களா!!!! எது கொட்டை எடுத்த புலியா அல்லது கொட்டை எடுக்காத புலியா? ஆமாம் தானைத்தலைவர் மலையாளி பிரபாகரன் 20,000 புலி(பூனை) வீரர்களுடன் முல்லைத்தீவு காட்டுக்குள் பூமிக்கு அடியில் நிலத்தடி அறைகளில் பதுங்கியுள்ளார்கள் (முன்பு வடக்கு vietnam kamunis போராளிகள் பதுங்கியிருந்தது போல்) எந்த நேரத்திலும் வந்து தாக்குதல் நடத்தி முழு இலங்கையையும் கைப்பட்றிவிடுவார்கள்!!!!!! இதை நம்புங்கள்…… இதை நம்புங்கள்………மக்களே!!!!! எங்களுக்கு ஆயுதம் வாங்க தொடர்ந்த நிதியளியுங்கள் புலம்பெயர் எங்கட மக்களே!!!! அட போங்கையா!!! 18/5/2009-க்கு பிறகு ஒரு கையெறி குண்டை கூட சிங்கள ராணுவத்தை நோக்கி தூக்கி எறிய ஒரு புலிக்கும் துப்பில்லை மடிந்தவன்போக பிழைத்தவன் எல்லோரும் சிங்கள ராணுவத்துக்கு கையூட்டு கொடுத்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்று சுகமாக வாழ்ந்துபழகி முறையான குடியுரிமை கிடைக்காததுகளுடன் சேர்ந்துகொண்டு எங்கே மறுபடியும் இலங்கைக்கே திருப்பியனுப்பிவிடுவானோ என்ற அச்சத்தில் இப்போ காகித புலிகளாகவும் கம்பியுட்டர் புலிகளாகவும் பீதிய கிளப்புது!!!!!
இன்று ஈழ தமிழர் பிரச்சினை சர்வதேச அளவில் சென்று விட்டது ..இந்தியா தேவை இல்லாமல் ஈழ தமிழர் விடயத்தில் மூக்கை போட்டதற்கு வாங்கி கட்டபோகின்றது முதலில் அனுபவிய போவது தமிழ்நாடு ,,வாங்கி கட்ட தயாராக இருங்கள் …இன்று மேற்கு நாடுகளில் வாழும் 90% ஈழ தமிழர்கள் அந்த நாடுகளில் பிரஜைகள் …இவர்கள் முயற்சியால் தான் ஈழ பிரச்சினை உன் வரை போய் விட்டது ..ஈழ மக்கள் இலங்கையில் உலகெங்கும் தினமும் முன்னேறி கொண்டு உள்ளார்கள் …தங்க தமிழக மக்கள் டாஸ்மாக் வரிசையில் தினமும் அதிகரித்து கொண்டு உள்ளார்கள் தினமும்..வாழ்க
@ செம்பருத்தி வாசகர்கள்
கவனியுங்கள்
ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் 2009 மே மதம் கடைசியில் என்ன நடந்தது என்று எவருக்கும் இன்று வரை தெரியாது ..இலங்கை முன்னணி பத்திரிகை ஆசிரியர்களுக்கு கூட ..அனால் இந்த மயிராய் மீன் குஞ்சுவுக்கு எல்லா விடங்களும் துல்லியமாக தெரிந்து உள்ளது ஆக இந்த குஞ்சு சிங்கள ராணுவத்தின் உளவு பிரிவில் பணிபுரிந்து இருக்க வேண்டும் நிச்சயம் குஞ்சு தமிழர் அல்ல … இந்த குஞ்சு இன்று இலங்கை அரசுக்காக தமிழ் வலை தளங்களில் ..ஈழ மக்களுக்கு எதிராக எழுதுகின்றது வெவ்வேறு பெயர்களில் ..வருமானதிட்காக…..அடிகடி சிங்கள பெயரில் கூட ஒருவர் கருது எழுதுவதை கவனித்து இருக்கலாம் …இரண்டும் ஒன்று ..இந்த குஞ்சுதான் அதுவும்
மீன் குஞ்சி தமிழர் ஒற்றுமைக்கும் உரிமை போராட்டத்திற்கும் எதிராக தகவல் சேகரித்து கொண்டிருக்கிறார்.தமிழனின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிய கட்டு கட்டாய் உண்மைகளை அவிழ்த்து விடுவது போல் நாடகம் இயக்குகிறார்.ஈழ தமிழர் அவர்கள் எதிர்க்கால செயல்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருகின்றனர் எனவே இந்தியாவின் சகுனி வேலைகள் அங்கு ஒடுக்க படும்.முதலில் தமிழர் நாடு ஆரிய,திராவிட அடிமை ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதை உறுதி செய்வதே நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் தொண்டர்களே!!!
அது உண்மைதான் ‘Anonymous’. மலையாளி என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தமிழருக்குள் சிண்டு முடிச்சி விடும் நரி தந்திரம் நன்றாகவே உமது கை வண்ணம் காண்பிக்கின்றது. ஏன் கேராளாவில் மது தடை சட்டம் போட்டு விட்டு ‘Bar’ – களை திறந்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்? தெரு முனைகளை எல்லாம் மாலை 6.30 மணிக்கு மேல் சென்று பார்க்கவும். கள்ளச் சாராயம் அங்கும் சர்வ சாதாரணமாக புழங்குவது தெரியும். ‘டீ கடையை மூடி விட்டு மாலையில் நாயர் டாஸ்மார்க் கடைக்குச் சென்று அங்குள்ள “டீ” அடிப்பதையும் கொஞ்சம் சொல்லிடுங்கோ. உங்களுக்கு புண்ணியமா போவும்.
இலங்கை வடுக நாயக்க தெலுங்கரின் ((போயேறிகளின்)) வரலாறு
தமிழகத்தை நாயக்க மன்னர்களும், தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியினரும் வழித்தெடுத்து நக்கியதால் ஏற்பட்ட பஞ்சத்தையடுத்து மலையகத்திற்குப் பிழைக்கப்போன தமிழர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? எங்கள் பகுதியில் நிறைய உன்டு. பால்யவயதில் மின்சாரமற்ற நிலவொளி வேளைகளில் கையகல உரலிலிட்ட ‘மட்டைக்குச்சி’ புகையிலைத் துண்டுகளை இடித்துக் கொண்டே தாங்கள் வாழ்ந்த கதை சொல்வார்கள். வெற்றிலையின் ரத்தச்சிவப்பாய் வழியும் துன்பம். இது உழைக்கப் போனவர்கள் தங்கள் வாழ்க்கையை வீனாக்கி கண்டியில் குடியுரிமை மறுக்கப்பட்டுத் திரும்பிய கதை.
அக்காவைக் கொடுத்து நாட்டைப் பிடித்த வடுக வீரபாகுகள் கதை தெரியுமா? படியுங்கள் ..
1605 முதல் 1635 வரை இலங்கையின் ‘கண்டி’யை ஆன்ட சிங்கள மன்னன் செனரதன். இக்காலத்தில் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் கொடுத்த இம்சையால் துறைமுகப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன. கண்டி மன்னர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் யாழ்ப்பாண மன்னன் வழி மட்டுமே கிடைத்து வந்தது.
அவ்வாறு கிடைத்த மற்றுமொரு உதவி மதுரை நாயக்க மன்னர்களின் இரு அரசிளங்குமாரிகள். கண்டிமீதான தென்னிந்திய நாயக்கர்களின் படையெடுப்பு இவ்விதம்தான் துவங்கி வைக்கப்பட்டது.
அந்தோ பரிதாபம் .. செனரத்தனுக்கு பின்பு அவனது இளையமகன் இராசிங்கன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவர்களை மணந்த மன்னனின் முதல் இரு புதல்வர்கள் ஊவா, மாத்தளைப் பிரதேசங்களுக்கான இளவரசர்களாக மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
இப்படியாக பேக்கரி டீலிங்கின் முதல் அத்தியாயம் பிசுபிசுத்துப் போனது ..
செனரதனுக்குப் பின்பு கண்டியின் ஆட்சிக்கு வந்த ராசசிங்கன் தொடர்ச்சியாக 52 ஆண்டுகள் (1635-1687) கண்டியை ஆண்டிருக்கிறான். இவன் தொடர்ச்சியாக டச்சுக்காரர்களிடம் போர்நடத்திக் கொண்டிருந்ததால் வடுக பேக்கரியின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டே இருந்தது.
ராசசிங்கன் மண்டையைப் போட்டபின்பு ஆட்சிக்கு வந்தவன் அவனது இரண்டாவது மகன் விமலதர்ம சூரியன் (1687-1706). இவனது காலத்தில்தான் வடுக வியாபாரம் சூடு பிடித்தது.
முப்பது ஆண்டுகாலம் அமைதிவழியிலும், பின்பு ஒரு முப்பதாண்டுகாலம் ஆயுத வழியிலும் போராடி நாம் வெல்லமுடியாத சிங்களத்தை வீரபாகு பாணி வியாபாரத் தந்திரத்தால் வீழ்தினார்கள்.
டச்சுக்காரர்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களால் டரியலாகிக் கிடந்த விமல தர்மனிடம் தஞ்சைநாயக்கர்கள் புது வகை வெண்ணை தடவிய ரொட்டியை விற்றனர். ((( இதுவே தமிழ்நாட்டில் பாண்டிய அரசின் சகோதர சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் மூத்தவன் சுந்தரபாண்டியனின் படைகளுக்கு ஆதரவாக வருகிறோம் என்று கூறி சுந்தரபாண்டியனுடன் இணைந்து பாண்டிய அரசை கைப்பற்றியவுடன் சுந்தரபாண்டியனையும் கொண்றதை நினைவில் கொள்க)))
அதாவது, தஞ்சை நாயக்க இளவரசியை விமலதர்மன் மணந்து கொள்வது. வரதட்சனையாக ஆயிரக்கணக்கான நாயக்கப் போர்வீரர்களை அளிப்பது. டீலிங் வெற்றி பெற்று பின்பு போர்வீரர்களுடன் கொசுராக தஞ்சை நகர நாயக்கப் பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப் பட்டனர்.
இக்குடியேற்றத்தின் பலனாக கண்டி நகரின் ஒரு பகுதியே நாயக்கப் பிரதேசமானது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குமார ரூப வீதியில் வாழ்ந்தனர். இது பிற்காலத்தில் மலபார்வீதி என அழைக்கப்பட்டது.
இப்போதைய யட்டிநுவர வீதி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருபகுதி யட்டிநுவரையெனவும் மறுபகுதி தஸ்கராவீதி எனவும் அழைக்கப்பட்டது. படிப்படியாக சேர்பெணற்செய்சா வீதி, கொடு கொடல்ல, ஹன்ன பெரன என கண்டியின் அனைத்து வீதிகளும் ஒரிஜினல் சிங்களனுக்கே இருட்டுக்கடை அல்வா கொடுத்து ஆக்கிரமிக்கப்பட்டது.
இதுவே பிற்காலத்தில் கண்டிநகரம் முழுவதும் தஞ்சாவூர் நாயக்கர் மயமாக்கப்பட்டதற்கும், தொடர்ச்சியான பேக்கரி டீலிங்க்களுக்கும் இடப்பட்ட வலுவான அடித்தளம்.
விமலதர்மன் 1706 ல் இறந்தபின்பு அவனது தஞ்சாவூர் நாயக்க அரசிக்குப் பிறந்த சிறீ நரேந்திரசிங்கன் கண்டியின் ஆட்சிக்கு வருகிறான் (1706-1739). வடுகம் கிட்டத்தட்ட பாதிக்கினறு தாண்டியாகி விட்டது. இவனது காலத்தில்தான் வடுகர்கள் கண்டியின் தலையெழுத்தை திசைதிருப்பி எழுதினர்.
சுதேசிகளான உள்ளூர் சிங்களவாசிகளுக்கும் கண்டிக்கு வந்தேறிய நாயக்க அரசியல் பிரதிநிதிகளுக்கும் அடிக்கடி முறுகல் ஏற்பட்டது. அந்தச் சிக்கலையும் நரேந்திரசிங்கனை வைத்தே திடீர்ச் சட்டதிருத்தம் கொண்டுவரச் செய்து சரிக்கட்டினர். அதாவது, அரச வாரிசாக தனது நெருங்கிய உறவினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அரசனுக்கே உரியது. இந்தச் சட்டமே பின்னாளில் சுதேசிச் சிங்களவர்கள் குழப்பம் விளைவித்த போதும் வடுகர்கள் தற்காத்துக்கொள்ள கேடயமானது. (இந்தக் காலகட்டத்திலெல்லாம். வடுகம் வடுகமாகவே இருந்தது. சிங்களமாக உருமாறவில்லை. ) தொலைநோக்குப் பார்வையாக நாயக்க இளவரசியை மணம்முடித்துக் கொடுக்கப்பட்ட போதே அவளின் தம்பியும் கண்டிக்கு அனுப்பப்பட்டு அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டு வந்தான். இவ்வாறு அனைத்து வழியும் செப்பனிடப்பட்ட பின்புதான் வடுக பேக்கரியின் ஷட்டர் திறக்கப்பட்டது.
13-5-1739ல் நரேந்திர சிங்கன் இறந்தபின்பு, அவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட வைக்கப்பட்ட அவனது தஞ்சாவூர் நாயக்க இளவரசியின் தம்பி பாலவிஜயன் தனது நாயக்க பெயரைத் துறந்து விஜயராஜசிங்கம் எனும் சிங்களப் பெயரோடு அரியனை ஏறுகின்றான்.
(பெயர் மாற்றி வைத்து குரளிவித்தை காட்டுவது வடுகத்தில் இன்று வரை தொடர்கிறது தெட்சினாமூர்த்தி -கருணாநிதி, கோபால்சாமி-வைகோ, விசயராஜுலு- விஜயக்காந்த், கோமளவள்ளி- ஜெயலலிதா, சிவாஜிராவ் -. ரஜினிக்காந்த்)
கண்டியை ஆண்ட வடுகத்தை உள்நோக்கிப் போனால் கடலளவு பேக்கரிடீலிங் தெறித்து நிற்கிறது. முழுவதும் எழுதுவதென்றால் தலைசுத்தி மயக்கம் வருகிறது. அதனால் முந்தையப்பதிவுகளின் தொடர்ச்சிக் கச்சேரியைப் பிரிதொருமுறை வைத்துக் கொள்வோம்.
இப்போ ஹைலைட் மேட்டர் ..
கண்டியை வடுகம் ஆண்டபோது சுதேசிச் சிங்களர்களால் பிரச்சினை வந்ததல்லவா? அதனை அவர்கள் எதிர்கொள்ள கையாண்ட முறை மிகவும் எளிது. தமிழகத்தில் கையாண்ட அதே உருமாற்ற முறை. மொத்தமாக புத்தமதத்தைத் தழுவுவது. பெயரும் சிங்களத்தில்.சிங்களத்தின் கொடி, உடை அனைத்திலும் வடுகக்கலப்பு. நிலங்களை சிங்களர்களுக்குப் பகிர்ந்தளித்து புத்தவிகாரைகளை எழுப்பினார்கள். சிங்களத்தையும் வடுகத்தையும் எளிதில் கண்டுபிடிக்க இயலா உருமாற்றம். .
கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம்.
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 – 1747)
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1782)
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782-1798)
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 bis 1815)
இதில் கடைசி வடுக சிங்கள மன்னன் விக்கிரமராச சிங்கன் மற்றும் அவன் குடும்பத்தினர் மட்டும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 18 ஆண்டுகள் அடைபட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், காலகாலமாக அங்கு குடியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான இலட்சக்கணக்கான வடுகர்கள் ??????
அந்தக் கேள்வியின் பதிலில் தேங்கிநிற்கிறது தமிழர் இனப்போராட்டத்தை திராவிடம் வீழ்த்தத் துடிப்பதன் மர்மம்.
சிங்களத்தின் பெயரில் சமீபம்வரை ஆண்டு தமிழர் குருதியைச் சுவைத்து நிற்கிறது வடுகர்..