“சர்வதேச மனித உரிமைகள் பேரவை 3 தீர்மானங்களை எடுத்துள்ளது அதில் மூன்றாவது தீர்மானத்தின் அடிப்படையில் இனப்படுகொலை சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை இந்த வருடம் புரட்டாதி மாதம் வெளிவரும் என்று நம்புகின்றோம்” தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்
இந்த நாட்டின் இனபிரச்சினை தீர்க்கப்படவேண்டும் இது முக்கியமான பிரச்சினை பாதிக்கப்ட்ட மக்களுக்கு உரிய பதில் வழங்கவேணடும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
உண்மை அறியப்டவேண்டும் பாதிக்கப்பட்டமக்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும் அவ்வாறான நிலைப்பாடு இருந்தாலே நல்லாட்சி ஏற்படும் உண்மை அறியப்ட்டதும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய அரசியல் தீர்வு வேண்டும் சுதந்திரமான தேர்தல் முறைக்கு பின் எமது பிரச்சினைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும்.
எமக்கு ஒரு அரசியல் தீர்வு தராவிட்டால் இன அழிவு ஏற்படும் சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுதான் எங்கள் செய்தி.
இந்ததேர்தலில் உங்கள் வாக்கு தெளிவான செய்தியை அனுப்பவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்
இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் வேட்பாளர்களான சிவசக்திஆனந்தன், விநோதரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சி.சாந்தி, இ.சாள்ஸ்,
றோய் ஜெயக்குமார் ,ப.செல்லத்துரை ,க.சிவநேசன், சி.சிவமோகன்,போக்குவரத்து மீன்பித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் , வடமாகாண கல்வித்துறை அமைச்சர் த.குருகுலராஜா, ஈ.பி.ஆர்.எல். எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா ,எம்.பி.நடராஜ் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் பெருமளவான மக்களும் கலந்து கொண்டனர்.
-http://www.tamilcnnlk.com