வடக்கு, கிழக்கில் இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

vikneswaran_4வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையிலே 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைப் பொறுப்பு வகிக்கின்றார்கள். அடுத்த கட்ட மாற்றமாக இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர், யுவதிகளாகத் தான் இருப்பார்கள்.

வயதிலே இருப்பவர்கள் சமுதாயத்தை இருக்கும் விதத்திலேயே கொண்டு நடத்தவே சிந்திக்கின்றார்கள். சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே சமுதாயத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் இளைஞர்களே இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

இன்று வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜனநாயகத்தின் முகவரி தேடும் இளையோரின் சங்கமத்தினால் முதலமைச்சருக்கு 25 கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இளம் சமூகத்தினர் அரசியலுக்கு வருவது தொடர்பில் உங்கள் கருத்து என்றவாறு கேள்வியை எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு விடையளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையிலே 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைப் பொறுப்பு வகிக்கின்றார்கள். அடுத்த கட்ட மாற்றமாக இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேற்கப்பட வேண்டியதொன்று.

எனவே சமுதாயத்திலும்,தலைமைத்துவத்திலும் மாற்றத்தை கொண்டு வருவதுடன் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் சிந்தனை ஆற்றல் இளைஞர்கள் மத்தியில் தான் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: