தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்த்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் திருகோணமலை நகரை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றது.
திருகோணமலை பாலையூற்று பகுதிப் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்றத் தலைவர் செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
திருகோணமலை வேட்பாளர்களான யதீந்திரா, திருமதி இந்துராணி தர்மராஜா, துரைரட்ணசிங்கம், புவனேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் செய்தியாளார்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது வடகிழக்கு மாகாணங்களில் பரவலாக தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடாத்திவருவதுடன் மக்கள் எதற்காக தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி வருகின்றது எனவும் அதன்மூலமாக மக்கள் மத்தியில் பெருமளவிலான ஆர்வத்தினை அவதானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த தேர்தல் முடிந்த பிறகு தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வு ஏற்படவேண்டும் அதனை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தாங்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் முற்போக்கு சக்திகளும் அவ்விதமான தீர்வினை ஆதரிப்பார்கள் என கருதுவதாகவும் நாட்டை பிளவு படுத்தாமல் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்வதே எமது நிலைப்பாடு அதனை சர்வதேச சமூகமும் ஆதரிக்கும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com

























