வடக்கு கிழக்கிற்கு சமஷ்ட்டி முறையிலான தீர்வை வழங்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையின் அடிப்படையில் சமஷ்ட்டி முறையில் தீர்வு வழங்கப்படும் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக தான் யாருடனும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
ஆனால் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும்.
இந்த அதிகாரப்பகிர்வு அரசியல்வாதிகளுக்கு இல்லை.
கிராமங்கள் வரையில் இந்த அதிகாரப் பகிர்வுகள் கொண்டு செல்லப்படும்.
இதன்கீழ் சிவில் அமைப்புகள் மதத் தலைவர்கள் போன்றோர் சக்திமயப்படுத்தப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.
-http://www.pathivu.com
இலங்கை சுதந்திரம் அடைந்தது 1948-ல்; இதுநாள் வரைக்கும் அதிகாரப் பகிர்வுப் பற்றி எவனும் பேசவில்லை; பிரச்சனை இப்போது முற்றி விட்டது.ஆதலால், இப்போது இதைப் பற்றி கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டீர்கள். ஏன்? உங்களின் மேலும் நம்பிக்கையில்லை; உங்களின் அதிகாரப் பகிர்விலும் நம்பிக்கையில்லை.