தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்ககூடாது: சிவாஜிலிங்கம்

sivaglingam_1தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்ககூடாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையில் மீண்டும் ஐ.தே.கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில் அவர்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார்கள். அந்த அழைப்பை ஒத்துக் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதற்கு இணங்க கூடாது என்று குறிப்பிட்ட அவர்,

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான அழைப்பு 1965 ம் அண்டு இதே ஐ.தே.கட்சியினால் உருவாக்கப்பட்டு டட்லி சேனநாயக்கா தலமையில் கொண்டுவரப்பட்ட டட்லி செல்வா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு 7 கட்சிகள் சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தார்கள்.

அதில் மாவட்டசபைகளை அமைக்கும் ஒப்பந்தத்தைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியது. கடைசியாக திருகோணமலை ஆலயத்தை புனித பகுதியாக பிரகடனம் செய்யுங்கள், என கேட்டார்கள் அதுவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் 1969ம் ஆண்டின் பிற்பகுதியி ல் தமிழரசுக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்கள். எனவே தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பு இணங்க கூடாது.

இனப் பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் அரசாங்கம் தேசிய அரசாங்கத்தில் இடம்பெறக்கூடாது. எதிர்க்கட்சியில் இருந்து கொள்ளவேண்டும்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவதானால் கூட நிபந்தனைகளுடன் அத்தகைய ஒத்துழைப்பு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: