வடக்கு முதலமைச்சரை வீட்டிற்கு அனுப்ப சுமந்திரனின் கும்பல் அழுத்தம்!!

vikneswaran111வடமாகாண முதலமைச்சரினை வீட்டுக்கனுப்பும் கூட்டமைப்பு சதித்திட்டம் தேர்தலின் பின்னராக மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.  நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மாதாந்த முன்னோடிக்கூட்டத்தில் முதலமைச்சரினை பதவியினை ராஜினாமா செய்து வீட்டுக்கு செல்லும்படி சுமந்திரனால் இயக்கப்படும் வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி மற்றும் ஆனோல்ட் கும்பல் கோரியுள்ளது.

இனிமேல் முதலமைச்சரின் தலைமையினை ஏற்கப்போவதில்லையெனவும் அவர் தலைமையிலான கூட்டங்களிற்கு பிரசன்னமாகப்போவதில்லையெனவும் தெரிவித்து மிரட்டியுள்ள இக்கும்பல் கௌரவமாக பதவியினை ராஜினாமா செய்துவிட்டு வீடு செல்லவும் வற்புறுத்தியுள்ளது.

புதிய திட்டத்தின் பிரகாரம் தற்போதைய தவிசாளரும் முதலமைச்சர் கதிரையில் மாறாத காதல் கொண்டவருமான சீ.வி.கே.சிவஞானத்தை முதலமைச்சராக்கவும் அமைச்சர்களுள் ஒருவரை பேரவை தலைவராக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வெற்றிடமாகும் அமைச்சு பதவிக்கு சுழற்சி முறையில் ஆனோல்ட், சுகிர்தன் தரப்புக்களிற்கு சந்தர்ப்பம் வழங்க சுமந்திரன் தரப்பு உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தேர்தலில் நடுநிலை வகிக்கும் முதலமைச்சரது முடிவினையடுத்தும் ஏற்கனவே இனஅழிப்பு பிரேரணையினை நிறைவேற்றியமை மற்றும் சர்வதேச அழுத்தங்களிற்கு பணிந்து போகாமை, ரணில் அரசுடன் முரண்பட்ட போக்கென தமிழரசுக்கட்சி தலைமை பழிவாங்க காத்திருந்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னராக அதனை அமுல்படுத்த சம்பந்தன் தரப்பினிலிருந்தும் நல்லெண்ண சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தொடர்ச்சியான அழுத்தங்களினை பிரயோகித்து தனிமனித கௌரவத்தை பேணும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சுயமாக ராஜினாமா செய்து வீடு போகச்செய்வதே இத்தரப்பினது நோக்கமென நம்பப்படுகின்றது.

மூத்த நீதிவானாகவும் தமிழர்களின் நன்மை மதிப்பினை பெற்றவருமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரினை நேற்று முளைத்த காளான்கள் கேள்வி கேட்ட அவமதித்த வேளை அவர் கூனிப்போயிருந்தமை மனதில் வலியினை தருவதாக நடுநிலையான கூட்டமைப்பு உறுப்பினரொருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ரணிலென பலதரப்பும் முதலமைச்சரினை வீட்டுக்கனுப்பும் நடவடிக்கைக்கு மறைமுக ஆசீர்வாதத்தை வழங்கிவருவதாக சுமந்திரனினது ஆதவாளர்கள் தரப்பில் ஏனைய உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழல் இன்ற வடமாகாண கூட்டத்தொடர் பல அதிசயங்களை தரலாமெனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

-http://www.pathivu.com

TAGS: