காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்!?

switzerland_001இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் குறித்த நாடுகள் அது தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க மறுக்கின்றன.

கடந்த ஆறு மாத காலத்தினுள் சுமார் 840 பேர் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிடவில்லை.

இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி செல்லும் பெருமளவானோர் நேபாளம் ஊடாகவே பயணிக்கின்றனர். முன்னைய காலங்களில் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து ஊடகவியலாளர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டோரும் இந்த வழியைப் பின்பற்றியே வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் கருவாட்டு வியாபாரிகளும் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்ட காலம் ஒன்றும் இருந்தது என்றும் திவயின பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: