தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறுதான் வலியுறுத்துவதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்றைய திவயின சிங்கள பத்திரிகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, அதிகாரப் பகிர்வின் போது வழங்கிய அதிகாரத்தை மீண்டும் பறித்தெடுத்துக்கொள்ள மத்திய அரசாங்கத்தினால் முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை.
எங்களது கோரிக்கை என்னவென்றால் அதிகாரத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் என்பதுதான். அதன் மூலம் அதிகாரம் எங்களிடம் நிரந்தரமாக இருக்கும். மத்திய அரசாங்கத்தினாலும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது.
தேசிய அரசாங்கம் தொடர்பில் தமக்கு விசேட அழைப்புகள் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கவே விருப்பம் கொண்டுள்ளதாகதாக தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் தமது உரிமைகளை போராடிப் பெறமுடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ந்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com