தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர்.
நிஸா பிஸ்வாலுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் ஊடககங்களிற்கு தெரிவித்துள்ள கருத்தினில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் உள்ளக விசாரணையினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களது இத்தகைய எதிர்ப்பு நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஆதவாளர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.இதற்கு பதிலளிக்க முடியாது பலரும் தற்போது முடங்கிப்போயுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களினில் குரல் எழுப்பிய பலரும் தற்போது சுருண்டு போயுள்ளனரென அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வரப்போகும் ஜ.நா விசாரணை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளக விசாரணை காலங்கள் கடுமையான எதிர்வினைகளினை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு கடுமையான தர்மசங்கடங்களை தரலாமென நம்பப்படுகின்றது.
-http://www.pathivu.com