ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இலங்கையின் புதிய தந்திரம்!

genevaஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 30வது அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், குறைந்து மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் தயாரித்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவலின்படி, சண்டேலீடர் ஸ்தாபகர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன விடயம், ரக்பி வீரர் தாஜூதீனின் கொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கைகள் தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த அறிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை ஜெனீவா மாநாடு செப்டம்பர் 14ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது இலங்கை குறித்த மூன்று அறிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாட எதிர்ப்பார்க்கிறது.

இதனடிப்படையில் இலங்கை மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அழுத்தங்கள், தாக்கங்கள் குறையும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.

-http://www.tamilwin.com

TAGS: