தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை – நோர்வேயின் தூதுவர்

sampanthan_sumanthiranகடந்த வியாழக்கிழமை (27.08.2015) நோர்வேயின் சிறீலங்காவுக்கான இராஜதந்திரிகளின் ஏற்பாட்டில் நோர்வே தமிழ் அமைப்புகளுக்கான சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பானது சிறீலங்காவை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றபோகின்றோம் என்று சொல்லாமல் சொல்லும் சந்திப்பாக இருந்தது என்பதுதான் உண்மை

அதாவது தமிழ்மக்கள் பலமாக இருந்த காலத்தில் உலகக்கதாநாயகனான அமெரிக்கா தன்னுடைய புன்சிரிப்பு பிள்ளையான நோர்வேயை சமாதானத்தேவனாக அனுப்பி தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி அதனூடக மிரட்டல்ப்பாணியிலும் சலுகைப்பாணியிலும் விடுதலைப்புலிகளை பணியவைத்து தங்கள் இலக்கை அடைவதற்காய் கொக்காக காத்திருந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் கொண்டகொள்கையில் இருந்து சற்றும் விலகாது மக்களின் நிலந்தர பாதுகாப்புக்குக்காக  தொடர்ச்சியாக பாடுபட்டனர் ஆனால் மேற்குலகத்தின் சலுகைக்கும் மிரட்டலுக்கும் பணிய மறுத்த விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டிய சர்வதேசம் இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்டனர்.

ஒரு நாட்டில் இன்னொரு தேசிய இனம் திட்டமிட்டு அழிக்கப்படுமானால் ஜநா சரத்தின்படி பிரிந்து செல்ல தகுதியுடையவர் என்பது எழுத்தில் உள்ளது இதன் அடிப்படையில் சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு இன்றியமையாத தேவையாக உள்ளநிலையில் அரசியல்ரீதியாக அதற்கான வலுவான போராட்டத்தினை புலம்பெர்ந்த மக்கள் முன்னேடுத்து வருகின்றார்கள்.

இப்போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற சூழ்நிலையில் இப்போராட்டங்களை வலுவிளக்க செய்வதற்கான காய்நகர்த்தல்களை உலகம் கச்சிதமாக திட்டமிட்டு செயல்ப்படுத்தி வருகின்றது இதன் ஒரு அங்கம்தான் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலும் புதுமுகங்களின் வருகையும.

நல்லகாலம் பிறக்கிறது என இறந்தவர்களின் மேல் சத்தியம் செய்து உறுதி மொழிகளை வாரி வழங்கிய வள்ளல்கள் இன்று கொள்கைப் பிரகடணத்திற்கு மரணச்சடங்கு வைக்க துணிந்துள்ளார்கள்
இதற்கான பதில் நடைபெற்று முடிந்த நோர்வே தமிழ் அமைப்புகளுடனான சந்திப்பின்போது சிறீலங்காவுக்கான முன்னாள் நோர்வே தூதுவர் வாயில் இருந்து சான்றாக பதிவாகியுள்ளது
அதாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச விசாரனையை எற்றுக்கொள்ளவில்லை அதனால் நாங்களும்(நோர்வே) ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

-http://www.pathivu.com

TAGS: