நேபாளத்தில் உள்ள Khokana கிராமத்தில் இளைஞர்கள் கூட்டம் தண்ணீரில் வீசப்பட்ட ஆட்டை துரத்தி சாகடிப்பதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
Khokana கிராம மக்கள் புனிதமாக கருதப்படும் Deu எனும் குளத்தில் உயிருடன் இருக்கும் இளம்வயது ஆட்டுக்குட்டியை வீசி, தண்ணீரில் அது தத்தளிக்கும்போது இளைஞர்கள் பாய்ந்து சென்று கைகளாலேயே ஆட்டுக்குட்டியை சாகடிக்கின்றனர்.
இந்த விழா 900 ஆண்டுகள் பழமையானதாக கூறும் இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இனத்தாரால் மட்டுமே ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
12-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதன் முதலாக இந்த விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
Deu குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி இறந்ததைத் தொடர்ந்து அங்குள்ள தேவதையை சமாதானப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஆடு ஒன்றை குளத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு தற்போது விலங்கு ஆர்வலர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது, அப்பாவி ஜீவன்களை கடவுளின் பெயரால் வதைப்பதை காட்டுமிராண்டித்தனம் என அவர்கள் வாதிடுகின்றனர்.
உலகம் முழுவதும் இருந்து விலங்கு ஆர்வலர்களால் இந்த விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் அவுஸ்திரேலியா மற்றும் நேபாளத்தில் இயங்கி வரும் விலங்குகள் நல அமைப்பும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com
































ஆஹா ஆஹா !!! நம்ம இந்து மதம் என்னம்மா அன்பையும் அருளையும் ஜீவகாருண்யத்தையும் இவர்களுக்கு போதித்திருக்கு!!!!! வாழ்க நேப்பால இந்துக்கள்!!
அடப் பாவிகளே! நீங்கள் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லையா!….. மறந்து விடாதீர்கள்….. உங்களின் செயலுக்கு பதிலடியாக கூடிய விரைவில் இன்னொரு பூகம்பம் வரத்தான் போகிறது. இன்னும் எத்தனை லட்சம் பேர் பலிகடா ஆகப் போகிறீர்ளோ…..செத்து மடியுங்கள்…
இ வர்கள் முட்டாள்கள்.இந்து சமயம் இப்படியெல்லாம் செய்யுங்கள் என்று போதிக்கவில்லை.
இந்த வருடாந்திரத் திருவிழா காட்டுமிராண்டித்தனம் என்றால் பினாங்கு பண்டார் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் ஆடு வெட்டி படையலிட்டு தின்னுவோர் காட்டுமிராண்டிகளை விட மகா காட்டுமிராண்டிகளா? இதையும் பினாங்கு மாநில இந்து மத அறத்துறை வரவேற்கின்றதோ?. அந்த ஆலயத்தில் அருச்சகராக இருப்பவர் மலேசிய அர்ச்சகர் சங்கத்து உறுப்பினரா?. அங்கு சென்று வழிபடுபவர்கள் இந்துக்களா?. நல்வழி காட்டாத இந்து மதம் தேவைதானா?.
”உலகம் எவளவோ முன்னோரினாலும் இன்னும் மூடநம்பிக்கை பழகிபோனவர்கள் இருக்கத்தான் சொகிறார்கள்.மழை வேண்டி கழுதையை திருமணம் செய்வது, குழந்தையை நரபலி கொடுப்பது என்று இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் எப்பவோ நடந்த சம்பவம் அல்ல . இப்பொழுதும் நடந்துகொண்டு இருப்பவை தான்.
காட்டு மிராண்டிகளை விட கேவலமான பிறவிகள்