இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி நிற்பது தமிழின அழிப்பிற்கான சர்வதேச விசாரணையும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை அடிப்படையிலான அரசியுல் தீர்வுமே!

icet_logoஉலக நாடுகளின் துணையுடன் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உறுதியுடன் ஒற்றைப்புள்ளியில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இனப்படுகொலைக் குற்றத்தின் நேரடிப்பங்காளர்களின் எண்ணங்களிற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சர்வதேச சுயாதீன விசாரணையை மறுத்து உள்ளூர் விசாரனைப் பொறிமுறையை சில சக்திகள்  ஆதரித்து வந்தமையை உலகத்தமிழர்கள் தளத்திலும் புலத்திலும் முறியடித்து வருகின்றனர்.

 வடமாகாண சபை நிறைவேற்றிய வரலாற்று தீர்மானமும், நேற்றைய தினம் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால்  தாயகத்தில் தமிழின அழிப்புக்கு எதிரான சர்வதேச குற்றவியல் பொறிமுறையை வலியுறுத்தி ஆரம்பித்து தீவிரமாக மக்கள் மயப்படுத்தப்பட்டு விரிவாக்கப்படும் கையெழுத்துப் போராட்டமும் தளத்தில் மக்களின் தெளிவான முடிவைப் பிரதிபலிக்கின்றன. புலத்தில் ஈழத் தமிழர்களை  பிரதிநிதுத்துவப்படுத்தும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவை தொடர்ச்சியாக அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டிய முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் போராடி வருகின்றனர்.

தேர்தல் முடிவடைந்தவுடன் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பினால் பரிந்துரைக்கப்படவிருந்த அனைத்துலக சுயாதீனமானபோர்க்குற்ற விசாரணையை மறுதலித்து ஒரு பக்கசார்பான உள்ளக விசாரணைக்குள் முடக்கும் திட்டம் அதிவேகமாக முடுக்கி விடப்பட்டது.  எனினும் மக்களாணையை மதித்து பெரும்பான்மையான தமிழ் வேட்பாளர்கள் தொடர்ந்தும் அனைத்துலக சுயாதீனமான விசாரணையை வலியுறுத்திக் கோரியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வகையில் வடமாகாண சபையால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட  சர்வதேச சுயாதீன விசாரனையைக் கோரும் தீர்மானத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட  போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களையும், இனப்படுகொலையையும் உள்ளடக்கியிருப்பதை நாம் வரவேற்கிறோம்.

சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் இனவெறிப் போரின்மூலம் பறித்தெடுக்கப்பட்ட எங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களது பங்கேற்பானது அதிமுக்கியமாகும். அவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் மூலமாகவே பெருவலிமைகொண்ட உந்துசக்தியாக எமது உரிமை மீட்புப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்ல முடியும் என்பதனை இவ்விடத்தில் அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

-http://www.pathivu.com

TAGS: