தமிழர் பிரச்சினையை வெறுமனே பொருளாதார பிரச்சினையாக கருத முடியாது: மனோ கணேசன்

manoGaneshanபொருளாதார பிரச்சினை என்று கூறி தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வைத்தியசாலைகளை அமைத்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற அடிப்படைகளை மேற்கொண்டால், இனப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று வாதிடுகின்றனர்.

எனினும் அதிகாரப் பரவலாக்கல் மூலமே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தாம் திடமாக நம்புவதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தெ ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் பேச்சுவார்த்தைக்கான அங்கமாக தம்மை அங்கீகரித்தால் தாம் அதற்கு தயாராக முடியும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது பணிகளை பொறுத்தவரையில் அது குடியியல் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கியுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரதான கடமை, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது அமைச்சின் கீழ் வருவதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளால் இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களும் ஒன்றுபடுவதில் சிக்கல்கள் உள்ளன. அவற்றை தாம் களைய முயற்சிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள ஒவ்வொருவரின் சமவுரிமையையும் மத மற்றும் இன அடையாளத்தையும் மறுக்க முடியாது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: