போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் நடைமுறை! அமெரிக்காவின் விசேட தூதுவர் கோரிக்கை

stephen_rapp_001இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப் கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பொறுப்புக் கூற வேண்டியதில்லை என்று வலியுறுத்தியுள்ள ஸ்டீபன் ரெப், இடைத்தரகர் நிலையில் இருந்தவர்களே போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கான நடைமுறை உள்ளடக்கப்பட்டால் மாத்திரமே உள்ளக விசாரணைப் பொறிமுறை அர்த்தமுள்ளதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: