முள்ளிவாய்க்கால் முடிவில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை!

sarath_mahintha_001விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் 2009இல் நடந்த இறுதி யுத்தத்தின் வெற்றிக்காக இலங்கை இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததாக  வாசகர் ஒருவரின் கேள்விக்கு விகடன் சஞ்சிகையின் கழுகார் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்‌ச அமைச்சரவையில் அங்கம் வகித்த கருணா, பிரபா கணேசன் போன்ற முன்னாள் அமைச்சர்கள், இலங்கையில் போர் நடத்தியதும் நடக்கக் காரணமாக இருந்ததும் அன்றைய இந்திய காங்கிரஸ் அரசு தான் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து மறுப்போ, எதிர் அறிக்கையோ விடாதது ஏன்?

2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, இந்தப் போரை நடத்துவதற்கு இலங்கை தரப்பில் மூன்று பேரும் இந்தியாவின் தரப்பில் மூன்று பேரும் நியமிக்கப்பட்டார்கள் என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.
போர் முடிந்த நாள் அன்று, கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் வாசலில், இந்தியாவுக்கு நன்றி என்று வாசகங்கள் தாங்கிய பதாகைகள் இருந்தன. அப்போதே மறுக்காதவர்கள் இப்போது எப்படி மறுப்பார்கள்? என கழுகார் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: