குற்றம் சுமத்தப்படும் இராணுவ அதிகாரிகள் பணியாற்றிய பகுதிகளும் ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

channel4குற்றம் சுமத்தப்படும் இலங்கை இராணுவ அதிகாரிகள் பணியாற்றிய பகுதிகளும் ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போர்க்குற்றச் செயல் அறிக்கையில் படையினர் கடமையாற்றிய வலயங்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போர்ககுற்றச் செயல் அறிக்கை கடந்த 11ம் திகதி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி பகிரங்கப்படுத்தப்படும் வரையில் அரசாங்கம் இதனை வெளியிடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

350,000 சிவிலியன்கள் போர்க்காலத்தில் எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து அப்போதைய மாவட்டச் செயலாளரது தகவல்களின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட படையினரின் பெயர் விபரங்கள் நேரடியாக குறிப்பிடப்படாத போதிலும், அவர்கள் கடமையாற்றிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஊடாக படையதிகாரிகளை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அறிக்கையில் சில விடயங்கள் ஈழ புலம்பெயர் ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: