இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் முகமாக தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன் போது நான்கு ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன் போதே பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி, இத்திட்டத்திற்காக 5 பில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளதாகவும், 22 கிலோ மீற்றர் தூரம் வரையில் இந்தப் பாலம் அமைக்கப்பட உள்ளதென்றும், இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், செயலாளர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com