இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு

un_meeting_zeid_001ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டு அமர்வில் முன்வைக்கவுள்ள தீர்மானத்திற்கு, பல மேற்கத்திய நாடுகளில் உட்பட ஐ.நா சபையின் அங்கத்துவ நாடுகளின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருட மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா உட்பட ஆசிய நாடுகளும், எதிராக வாக்களித்த பல நாடுகளும் இம்முறை அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசாங்கமும் இம்முறை இலங்கைக்கு சார்பான தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்படும் என தூதரக தகவல் வட்டாரங்களின் எதிர்பார்பாக உள்ளன.

இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக உள்நாட்டு பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரேரணை ஒன்றினையே எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: