போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையர்களுக்கு உரித்தான, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நம்பிக்கை வாய்ந்த நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றைக்குறித்த முன்மொழிவுகள் அமெரிக்க யோசனையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சம அனுசரணை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை பாராட்டுக்குரியது.
அமைதியை நோக்கிய பயணத்தில் இலங்கை மக்கள் அண்மைக்காலத்தில் இரண்டு தடவைகள் பிரிவினைக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்மொழிவானது அனைத்து இலங்கையருக்கும் ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் உறுதியான ஆதரவை வழங்கும்.
அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பான உறுதியான பதிலும் கிடைக்கப்பெறும்.
அத்துடன் தவறு செய்தவர்களுக்கு தண்டனையளிப்பதன் ஊடாக இலங்கை மக்களினதும், கீர்த்தி வாய்ந்த இராணுவத்தினரதும் நற்பெயர்கள் பாதுகாக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
நன்றி அமெரிக்க.நிச்சயமாக எங்கள் நண்பர் இந்தியா உங்களை எங்களுக்கு ஆதரவாக பேச கேட்டிருக்கும்.உலக நாடுகளும் எங்களுக்கு தன பேசும்.இந்தியாவின் உதவியால்தான் பல லட்ச விடுதலை புலிகளை கொன்றோம்.அதிலும் வெளிஉறவு துறையில் உள்ள மலையாள அதிகாரிகளின் பங்கு அளப்பரியது.(நாராயணன்,நம்பியார்,நிருபமாராவ்,சிவசங்கர் மேனன் அவர்கள் எல்லாம் எங்களுக்கு தெய்வம் போல)கருணாநிதி ,ப ஜ க .காங்கிரஸ் ,போன்றோர் இருக்கும் பொழுது எங்களை ஒரு மயிரும் புடுங்க முடியாது.இன்னும் சீனா ஜப்பான்,தாய்லாந்து ,கொரியா போன்ற புத்த நாடுகள் எங்களுக்குத்தான் ஆதரவு கொடுக்கும்.தமிழ் மக்கள் வாய் மூடிக்கொண்டு இந்தியாவோடு அடிபணிந்து இருப்பது நல்லது.இல்லையேல் விடுதலை புலி கதிதான் ஏற்படும்.எத்தனை சீமான் ,வைகோ வந்தாலும் ஒன்னும் பு………. முடியாது.வாழக் சிங்களம்.நன்றி இந்தியா(தமிழர்கள் தவிர்த்து)
ஒருகாலத்தில் ஆயுதபலம் கொண்டு உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பேரரசு இன்று அடங்கியிருக்கிறது .அதுபோன்று ஆயுதம் கொண்டு சிறுபான்மையினரை அடக்கி ஆளும் பெரும்பான்மையினரின் முடிவு வெகுதூரமில்லை .புத்தரின் அடிச்சுவட்டை பின்பற்றுகிறவர்கள் அன்பாலும் சம உரிமையினாலும் மட்டுமே நல்ல எதிர்காலத்தை காண முடியும் .