ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்பித்துள்ள உத்தேச தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. உத்தேச தீர்மானமானது இலங்கையின் நீதியின் குறிப்பிடத்தக்களவு வெற்றியாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு, பொதுநலவாய நாடுகள் நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.சர்வதேச குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கபபடக்கூடிய வகையில் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.இவ்வாறான ஓர் நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கத்தயார் என கட்சி அறிவித்துள்ளது.
உத்தேச தீர்மனத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளது.இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நீதிமன்றம் நிறுவி விசாரணை நடத்தப்பட்டால் தண்டனைகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.தமது நிலைப்பாட்டை பாதிக்கப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம என்ற போதிலும், நீண்ட காலநல்லிணக்கத்திற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் கட்சி செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
-http://www.athirvu.com