தடைகளை உடைத்து இலங்கை வெற்றிகரமாக முன்னேற்றியுள்ளது: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

srilankavideo_channel4ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கை தடைகளை உடைத்து வெற்றிகரமான முன்னேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக இலங்கையின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகம் நாட்டை வெட்கத்திற்கு உள்ளாகும் யோசனைகளை முன்வைத்தது.

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிரான யோசனைகள் வெற்றி பெற்றதுடன் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவைக்குள் கொண்டு வரப்பட்ட யோசனையில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்ற போதிலும் பேரவையில் முன்வைக்கப்பட்ட இணக்கப்பாடுகளை வெற்றியடைய செய்ய தவறியதால், இலங்கை மக்கள் பெற்ற வெற்றி தோல்வியடைந்தது.

இதன் மூலம் 2012, 2013, 2014, ஆண்டுகளில் யோசனைகள் கொண்டு வருவதற்கான வழிவகை ஏற்பட்டதுடன் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகளுக்கு எதிராக மாறின. இதனால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவமானமும் அவமதிப்பு ஏற்பட்டது.

இதனால், பல தசாப்த காலமாக சகல நாடுகளுடன் இணக்கத்துடன் நடுநிலையாகவும் நட்புறவுடனும் இருந்து, ஜக்கிய நாடுகள் அமைப்பின் கௌரவத்துக்கு பாத்திரமாக இருந்த நாட்டுக்கும் நாட்டுக்கு மக்களுக்கும் இந்த காலப் பகுதி அகௌரவமான காலமாக மாறியது.

2009 ஆம் ஆண்டு மூன்று தசாப்த கால போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலாபலன்கள் கிடைக்காமல் போனது.

சுதந்திரமும், ஜனநாயக ரீதியான ஆட்சியும் இல்லாம் போனது.

சமாதானமாகவும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்ற எமது நாட்டு மக்களின் அபிலாஷை அவர்களுக்கு இல்லாமல் போனது.

நல்லிணக்கம் மூலம் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப கிடைக்க சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டதால், நாடு சர்வதேசத்திற்கு மத்தியில் மேலும் தனிமைப்படுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக மௌனம் சாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு சர்வதேச அர்த்தப்படுத்தல்களும், விசாரணைகளையும் எதிர்நோக்கியது.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் திடசங்கட்பமான முயற்சியின் பலனாக இலங்கைக்கு மீண்டும் சர்வதேசத்தின் பெறுமதியான மதிப்பு கிடைத்துள்ளது.

உலகத்தின் பெறுமதியை மதிக்கும், பொறுப்பு , நம்பிக்கை மற்றும் சமாதானமான நாடாக இலங்கை மீண்டும் சர்வதேசத்துடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: