பெட்டாலிங் ஸ்திரீட்டுக்கு வருகை மேற்கொண்டபோது தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சீனத் தூதரிடம் தாம் விளக்கம் கேட்டது உண்மையே என்பதை வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் உறுதிப்படுத்தினார்.
ஆனால், அமைச்சர்கள் சிலர் அவருடன் ஆலோசனை கலக்காமலேயே அவ்விவகாரத்தில் மூக்கை நுழைத்ததுதான் அனிபாவுக்கு வருத்தமளிக்கிறது.
தூதர் ஹுவாங் ஹுய்காங்கை விளக்கம் கேட்க அழைக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இன்று நியூ யோர்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் அமைச்சர்கள் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இது போன்ற விவகாரங்களுக்கு விஸ்மா புத்ராவின் மூத்த அதிகாரிகளே தீர்வு காண்பதுதான் வழக்கமான நடைமுறையாகும்.
“சொல்லப்போனால், எளிதாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விவகாரம் இது. அமைச்சர்கள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை.
“அவர்களின் தலையீடு பொது மக்களிடம் ஓர் எதிர்மறையான எண்ணம் உருவாக காரணமாகி விட்டது. இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழக்கூடாது”, என அனிபா அறிக்கையில் குரிப்பிட்டார்.
























இப்படியும் ஓர் கூர்கெட்ட அரசாங்கம் இந்நாட்டு அரசாங்கம்! நம்ம நாட்டு அரசாங்கம் என்று சொல்வதற்கே நா கூசுது.
நீங்கள் கடித்துக் குதறிருக்க வேண்டாமோ? நீங்கள் கடிந்து கொண்டால் அவர்கள் இடிந்து போய் விடுவார்கள் எனக் கனவு காணாதீர்கள்!