போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், மஹிந்தவுக்கும் ஆபத்து!

Mahinda_Rajapaksaபோர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை குறித்து திவயின பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாக அடித்துச் சொல்லப்பட்டுள்ளது.

அதனை விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை ஊக்கப்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கின்றது. அவ்வாறெனில் இந்த அறிக்கை மூலம் இராணுவத்தினருக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுவது பொய்யானது.

அத்துடன் இந்த விவகாரங்களை விசாரிக்க அமைக்கப்படும் பொறிமுறையில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதான காழ்ப்புணர்வில் யாரேனும் பொய்ச்சாட்சியம் அளித்தாலும் அதனையும் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறான விடயங்கள் காரணமாக இந்த அறிக்கை மற்றும் அதனுடன் இணைந்த விசாரணை என்பன இராணுவத்தினருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஆபத்தானது என்றும் ஜீ.எல். பீரிஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: